அர்மீனியா நாட்டுடன் ஆட்டோ நிறுவனம் புதிய தொழில் ஒப்பந்தம்

ஆர்மீனியா நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையே பாலமாக மாறியிருக்கிறது எம் ஆட்டோ எலக்ட்ரிக் நிறுவனம். அர்மீனியா குடியரசு நாட்டிற்கு மின்சார வாகனங்களை இயக்குவது குறித்த திட்ட அறிக்கையை எம் ஆட்டோ எலக்ட்ரிக் நிறுவனம் தயாரிக்கிறது. அர்மீனியா நாட்டில் சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் விதமாகவும் காற்று மாசு கட்டுப் படுத்தும் விதமாகவும் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வது குறித்து ஆர்மீனியா நாட்டில் எம் ஆட்டோ நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது.இதில் ஆர்மீனியா நாட்டில் மின்சார வாகனத்தை இயக்குவது குறித்து ஒரு திட்ட அறிக்கை தயாரித்து அளிக்கப்பட உள்ளது.

அதன்படி எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டு அதன் மூலம் மின்சார வாகனங்கள் தயார் செய்து வருகின்றன.

இதுகுறித்து அர்மேனியா ஆளுநரை சென்னைக்கு அழைத்து ஆர்மீனிய நாட்டுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட உள்ளது. அதற்கான பணிகள் முழுவீச்சில், எம் ஆட்டோ நிறுவனம் செய்து வருகிறது.

மேலும் எம் ஆட்டோ நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மின்சார ஆட்டோ ஒன்று ஆர்மீனியா குடியரசுத் தலைவர் மாளிகையில் இயக்குவதற்கு முன் அனுமதியை எம் ஆட்டோ நிறுவனம் பெற்றுள்ளது. மேலும் அர்மெனிய நாட்டில் விரைவில் அறிமுகமாக உள்ள மின்சார வாகனங்கள் செயல்பாட்டை தொடங்கி வைப்பதிலும் எம் ஆட்டோ நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது.

விரைவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆர்மீனியா நாட்டுக்கான மின்சார வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளதாகவும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் எம் ஆட்டோ நிறுவனத்தின் செயல் தலைவர் மன்சூர் அலி கான் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அர்மேனியா நாட்டில் முதற்கட்டமாக மக்கள் பயன்பாட்டிற்கு என நூறு மின்சார வாகனங்கள் இங்கிருந்து கொண்டு சென்று மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளதாகவும் எம் ஆட்டோ நிறுவனத்தின் செயல் தலைவர் மன்சூர் அலி கான் தெரிவித்துள்ளார்.