இயற்கை வைரங்கள் மற்றும் ஆய்வகத்தில் – உருவாக்கப்படும் வைரங்கள் (LDG’s) தொடர்பான சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த பல விஷயங்கள் ஏற்கனவே கூறப்பட்டு விட்டன. DPA மே மாதம் S&P குளோபலின் ஒரு பகுதியான TRUCOST ESG அனாலிசிஸ் – ஆல் மேற்கொள்ளப்பட்ட ஒரு அறிக்கையை வௌியிட்டது. அது, DPA உறுப்பினர்களின் வைரச் சுரங்க செயல்பாடுகள் ஏற்படுத்தும் வருடாந்திர சமூகப்-பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் தாக்க அளவீனங்களை வௌிப்படுத்தியது. (www.total-clarity.com). TRUCOST – ன் படி, முக்கால்வாசி நிறுவனங்களின் பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ள ஒரு தொழில்துறை, தங்களது மொத்த தாக்கங்கள் குறித்த அளவீனங்கள் மற்றும் அறிக்கையை மேற்கொள்ள ஒரு மூன்றாம் தரப்பினை நாடியது இதுவே முதல் முறையாகும்.
TRUCOST நடத்திய சுற்றுச்சூழல் கால்தடப் பகுப்பாய்வு குறித்தும் மற்றும் இயற்கையான வைரங்கள் மற்றும் LGDகள் இடையிலான CO2 உமிழ்வுகள் ஒப்பீடு குறித்தும் அறிந்து கொள்ள ஊடகத்தினரும் மற்றும் தொழில்துறையினரும் மிகுந்த ஆர்வம் காட்டினர். ஃபிராஸ்ட் & சல்லீவனால் 2014 ல் வௌியிடப்பட்டதொரு அறிக்கை, TRUCOST பகுப்பாய்வை மறுக்க LGD உற்பத்தியாளர்களால் பரவலாக மேற்கோள் காட்டப்படுகிறது. இந்த தரவு சச்சரவு (சில எளிய உண்மைகளை தௌிவுபடுத்த நான் அது குறித்து பின்னர் விரிவாக விளக்குவேன்) TRUCOST ஆய்வின் முக்கிய கண்டறிதல் ஒன்றை ஏறக்குறைய முற்றிலுமாக மறைத்துவிட்டது என்பதே துரதிருஷ்டவசமான உண்மையாகும். அது, பெரிய அளவிலான வைரச்சுரங்க செயல்பாடுகள் ஒவ்வொரு ஆண்டும் ரூ 1135 கோடிகளுக்கு மேற்பட்ட நிகர மதிப்பினை ஒவ்வொரு ஆண்டும் உருவாக்குகிறது மற்றும் அதில் பெரும்பான்மையானவை உள்ளுர் வைரச்சுரங்க சமூகத்தினராலும் மற்றும் உற்பத்தி நாடுகளாலும் மட்டுமே உருவாக்கப்படுகிறது என்பதே ஆகும்.
உள்ளுர் சமூகத்தினருக்கு உருவாக்கப்பட்டுள்ள பலன்கள் கீழ்காணும் அளவீனங்களைக் கொண்டுள்ளன: DPA செயல்பாடுகளைச் சேர்ந்த 77,000 பணியாளர்களுக்கு சம்பளங்கள் மற்றும் பலன்களாக மாத்தரம் 276 கோடிகள் செலுத்தப்பட்டுள்ளன. ரூ 482 கோடிகள் உள்ளுர் சரக்குகள் மற்றும் சேவைகளுக்காக செலவழிக்கப்பட்டுள்ளன. உள்ளுர் மற்றும் தேசிய அரசுகளுக்கான வரிகள், பங்குத்தொகைகள் மற்றும் ராயல்டிகளாக ரூ 213 கோடிகள் செலுத்தப்பட்டுள்ளன. அரசுக்குச் செலுத்தப்பட்ட அத்தொகையில் பெரும்பான்மை கல்வி, ஆரோக்கியம் மற்றும் உள்கட்டமைப்பில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் என்று அனுமானிக்கலாம். வைர வருவாயின் சிறப்பான நிர்வகித்தலுக்கு போட்ஸ்வானா, யாகுடியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் சிறந்த உதாரணங்களாகும். இதன் அர்த்தம், பெரிய அளவிலான வைரச் சுரங்கச் செயல்பாடுகளால் உருவாக்கப்படும் மதிப்பில், ஒவ்வொரு ஆண்டும் ரூ 853 கோடிகள் அல்லது அதற்கு மேற்பட்ட பெரிய அளவிலான பங்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உள்ளுர் சமூகத்தினருக்கு பலனளிக்கும் வகையில் செலவழிக்கப்படுகிறது என்பதே ஆகும். ஒப்பீட்டளவில், 2016 ல், தனியார் முதலீட்டாளர்களுக்கு செலுத்தப்பட்ட பங்குத்தொகையாது ரூ 35 கோடிகளுக்கும் குறைவானதே ஆகும். ஒரு ஆண்டில் வர்த்தகம் செய்யப்படும் அனைத்து பட்டைதீட்டப்பட்ட வைரங்களின் வர்த்கத்தின் மொத்த மதிப்பு ரூ 1774 கோடிகள் என்பதை இங்கு நிச்சயம் குறிப்பிட வேண்டும். வெகு சில தொழில்துறைகளால் மட்டுமே இத்தகையதொரு குறிப்பிடத்தக்க அளவிலான சமூக பொருளாதார தாக்கத்தினை இந்த அளவிற்கு மேற்கொள்ள முடியும். இது வைரச்சுரங்க செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த வைர வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ளவர்களும் பெருமை கொள்ளவேண்டியதொரு விஷயமாகும்.
சுற்றுச்சூழல் கோரல்களைப் பொருத்த வரை, ஒரு ஆண்டில் DPA உறுப்பினர்களின் உற்பத்தியின் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த துல்லியமான விவரணையை TRUCOST அறிக்கை அளித்துள்ளது. இது, ஒரு வைரச்சுரங்கத்தின் வாழ்நாள் CO2 உமிழ்வு கணக்கீடு அல்ல. பல ஆண்டுகள் நீடிக்கும் உற்பத்தி காலத்தின், வருடாந்திர உமிழ்வுகளாகும். பெரிய அளவிலான வைரச் சுரங்க நிறுவனங்கள் ஏற்படுத்தும் முக்கிய சுற்றுச்சூழல் தாக்கம் CO2 உமிழ்வாகும். காரணம் சுரங்கத்தின் கால்தடமும் மற்றும் தண்ணீர் பயன்பாடும் மிகவும் சிறிய அளவே மற்றும் DPA உறுப்பினர்கள், தாங்கள் பயன்படுத்தும் நிலப்பரப்பிற்கு சராசரியாக மூன்று மடங்கு அதிக நிலப்பரப்பினை பாதுகாக்கின்றனர். 2014 ஃபிராஸ்ட் & சல்லிவன் அறிக்கையும் மற்றும் TRUCOST அறிக்கையும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம், ஒரு கேரட்டிற்கான இயற்றையான CO2 உமிழ்வின் எண்ணிக்கையாகும். ஃபிராஸ்ட் & சல்விவன் அறிக்கை ஒரு கேரட்டிற்கு 59 கிகி என்றும், TRUCOST அறிக்கை ஒரு பாலிஷ்டு கேரட்டிற்கு 160 கிகி என்றும் மதிப்பிட்டுள்ளது. சராசரியாக 35 சதவிகித உற்பத்தியை கருத்தில் கொண்டால், இந்த எண்ணிக்கைகள் பொருந்துகின்றன.
இரண்டு அறிக்கைகளும் ஒருங்கே ஒப்புக்கொள்ளாத ஒரு விஷயம், LGD உற்பத்தி தொடர்பான CO2 உமிழ்வுகளே. ஜுன் 21 தேதியிட்ட, http://www.jckonline.com/editorial-article/frost-sullivan-lab-grown-report/ என்னும் இணைப்பில் கிடைக்கப்பெறும் ராப் பேட்ஸ் கட்டுரையின் படி, 2014 ஃபிராஸ்ட் & சல்லிவனின் அறிக்கையானது காலாவதியானதாக மட்டுமின்றி, நம்ப முடியாததாகவும் மற்றும் சார்புதன்மை கொண்டதாகவும் திகழ்கிறது. LDG CO2 உமிழ்வுகளுக்காக தெரிவிக்கப்பட்டுள்ள எண்கள், முற்றிலும் தவறானதாகவும் மற்றும் நம்பமுடியாத அனுமானமாகவும் திகழ்கிறது : அதாவது, LGD உற்பத்தியாளர்களய் பிரத்தியேகமாக புதுப்பிக்கப்பட்ட எரிசக்தியை மட்டுமே பயன்படுத்துகின்றனர் என்பது போன்றவை. எந்தவொரு LGD உற்பத்தியாளரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதில்லை என்பதும் மற்றும் அதை மீறி பயன்படுத்துவதாக கூறுபவர்களும் வெறும் சூரியசக்தி கிரெடிட்களை மட்டுமே வாங்குகின்றனர் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. LGD உமிழ்வுகளின் உண்மைதன்மையை மதிப்பிட, TRUCOST அமைப்பு, HPHT மற்றும் CVD உற்பத்தியாளர்கள் பொதுவில் வௌியிட்டுள்ள மின்சக்தி பயன்பாட்டு எண்ணிக்கைகளை கருத்தில் கொண்டுள்ளது மற்றும் அவற்றை உள்ளுர் எனர்ஜி கிரிட்களைப் பயன்படுத்தி கார்பன் உமிழ்வுகளாக மொழிபெயர்த்துள்ளது. இந்த செயல்முறையியல் முற்றிலும் வௌிப்படையானதாகவும் மற்றும் ஆவணப்படுத்தப்பட்டதாகவும் திகழ்கிறது மற்றும் லைட்பான்ஸ் – என்னும் தற்காலத்தின் மிகுந்த திறன்வாய்ந்த LGD உன்பத்தியாளர் பொதுவில் சாத்தியமுள்ளது என்று ஒப்புக்கொண்டதற்கு இணையானதாகும். இம்முடிவுகளின் படி, சராசரியான LGDகள், ஒரு பாலிஷ்டு கேரட்டிற்கு 511 கிகி CO2 – ஐ உமிழ்கின்றன. இது, இயற்கை வைரங்களைக் காட்டிலும் மூன்று மடங்குகள் அதிகமாகும்.
பெரிய அளவில் கருத்தில் கொள்கையில், இவ்விரண்டு எண்ணிக்கைகளும் சிறிய அளவுடையதே. உதாரணத்திற்கு, 57 கிகி CO2 வௌியிடும் ஐஃபோன் – உடன் ஒப்பிடுகையில் இயற்கை வைரங்கள் மற்றும் LGDகள் இரண்டும் நீண்ட ஆயுளைக் கொண்டவை என்று கேட்கலாம். ஆனால், இதில் எது பெரிய விஷயம்?
உண்மையே பெரிய விஷயமாகும். ஒரு தொழில்துறையாக, நாம் உண்மையையும் மற்றும் நிஜங்களையும் மட்டுமே சார்ந்திருக்க வேண்டும். அது நமது எந்த அளவிற்கு வசதியற்றதாகவோ அல்லது முன்னமே-நிர்ணயிக்கப்பட்ட நம்பிக்கைகளுக்கு மாற்றாகவோ இருந்தாலும். உண்மையே முக்கியமாகும் மற்றும் அது எப்படியும் வௌிவரத்தான் செய்யும். நிரூபிக்கப்படாத, தவறாக வழிநடத்தக்கூடிய அல்லது நுகர்வோர் கோரிக்கைளை குழப்பக்கூடிய விஷயங்கள், தொழில்துறையில் உள்ள நம் அனைவருக்கும் குறுகிய காலம் மகிழ்ச்சியை அளித்தாலும், பின்னர் மிகப்பெரிய பாதிப்புகளை நிச்சயம் உண்டாக்கும் என்பதில் எத்தகைய மாற்றுக்கருத்தும் இல்லை.
ரிச்சா சிங் அவர்கள் வைர உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் (இந்தியா) மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் ஆவார்.