பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவிகளின் விமான பயண கனவு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ- மாணவிகளின் இமாலய ஆசைகளில் ஒன்றான விமானத்தில் பறந்து செல்வதென்ற ஆசையை Round Table India and Ladies Circle India நிறுவனம் நிறைவேற்றி சாதித்துள்ளது. விமானத்தில் பறந்த அந்த குழந்தைகள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ- மாணவிகள் ஆசைகளை என்னென்ன என்பதை ஆராய்ந்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக Round Table India and Ladies Circle India நிறுவனம் பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அந்த குழந்தைகளின் இமாலய ஆசைகளான விமானத்தில் பறக்கவைக்க Round Table India and Ladies Circle India நிறுவனம் முடிவெடுத்தது.

இன்று காலை விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துவரப்பட்டனர்.சென்னை ரவுன்ட் டேபிள், சிவகாசி ரவுன்ட் டேபிள், லேடிஸ் சர்கிள் 70 அமைப்பு பிரிவுகள் இணைந்து வறுமை கோட்டுக்கு கீழுள்ள மாணவர்களை ஒருங்கிணைத்து சென்னை அழைத்துவந்துள்ளனர்.

சிவகாசியில் இயங்கிவரும் N.P.S.P.A.R. ரத்னவிலாஸ் பள்ளி மாணவர்கள் ஆவர். அதிகாலை 4:30 மணிக்கு புறப்பட்டு, மதுரை விமான நிலையத்தில் 6:30 மணிக்கு சென்றடைந்தனர். பின்னர் ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் 7:50 மணிக்கு மதுரையில் இருந்து கிளம்பி சரியாக 9:05 மணிக்கு சென்னை வந்தடைந்தனர்.

அங்கு செய்தியாளர்களை சந்தித்த குழந்தைகள் அனைவரும், முதல் முறையாக விமானத்தில் பறந்து அனுபவத்தை உணர்வுபூர்வமாகவும், உற்சாகத்துடனும் பகிர்ந்துகொண்டனர். விமானத்தில் பறந்தது தங்களுக்கு காற்றில் மிதந்தது போன்ற ஒரு உணர்வை அளித்ததாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், இந்த ஆசையை எங்களுக்கு நிறைவேற்றி தந்த Round Table India and Ladies Circle India நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்தனர்.

இங்கிருந்து ஒரு நாள் முழுவதும் விஜிபி தங்க கடற்கரையில் உள்ள VGP UNIVERSAL KINGDOM ல் உள்ள ராட்சதக ராட்டினங்கள், 3D Clip art gallery, வண்ணமீன்களின் உலகம், விளையாட்டு பூங்காக்களில் விளையாடியும் பார்த்தும் மகிழ்நதனர். இது குறித்து பேசிய Round Table India and Ladies Circle India சார்பில் பேசிய விஜயராகவேந்தர், மாணவர்கள் மகிழும் வகையில், குழந்தைகள் சிவகாசியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துவரப்பட்டு மீண்டும் சிவகாசிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இது அவர்களுக்கு ஒரு அனுபவத்தை ஏற்படுத்தியிருக்கும் என்றார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவிகளின் கல்விக்காக இதுவரை பல்வேறு நலத்திட்டங்களை செய்திருப்பதாக கூறிய அவர், இதுவரை இந்தியா முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளை தேர்வு செய்து அதில் 6 ஆயிரம் வகுப்பறைகளை கட்டித்தந்து உதவியுள்ளதாக கூறினர். கடந்த 20 ஆண்டுகளாக இதுபோன்ற சேவைகளை செய்துவருவதாகவும், பள்ளி வகுப்பறைகளை சீறமைக்கும் பணிகளை இந்த 20 ஆண்டுகளில் தினமும் மேற்கொண்டு இந்த 6 ஆயிரம் வகுப்பறைகளை கட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.