Country Club Hospitality and Holidays Limited நடத்தும் ஆசியாவின் மிகப்பெரிய பிரமாண்ட இந்திய நவராத்திரி உத்சவ் 2019

இந்தியவின் பாரம்பரிய பண்டிகைகளான நவராத்திரி, ஹோலி, ரம்சான் போன்ற பண்டிகைகளை ஒரு விழாக்களை போல் கொண்டாடிவருகிறது Country Club Hospitality and Holidays Limited. 

இந்த ஆண்டு செப்டம்பர் 29 ம் தேதி தொடங்கவுள்ள ஆசியாவின் மிகப்பெரிய நவராத்திரி உத்சவ்   2019 நிகழ்வில் சாக்ஸி அகர்வால், பிக் பாஸ் 3 நிகழ்வில் பங்கேற்ற பிரபலங்கள் என எராளமானோர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர். 

Country Club Hospitality and Holidays Limited நிறுவனத்தின் தலைவர் திரு ராஜீவ்  ரெட்டி கூறுகையில், ஆசியாவிலேயே மிகப்பெரிய நவராத்திரி உத்சவாக கொண்டுவதற்கு காரணம், நவராத்திரி பண்டிகை மிகவும் மகிழ்ச்சியான பண்டிகைகளில் ஒன்று என்றும், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கோலாகலமாக கொண்டாடடப்படும் நிகழ்வுகளில் ஒன்று என்றார். Country Club Hospitality and Holidays Limited நடத்தும் இந்த பிரமாண்ட நவராத்திரி உத்சவில் பிரபல நடிகை சாக்‌ஷி அகர்வால் கலந்துகொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளது மேலும் சிறப்பு சேர்க்கும் என்றார். மேலும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வது குடும்ப உறுப்பினர்களுக்கு பல்வேறு மகிழ்ச்சிகளை தரும் என்றார். 

தொடர்ந்து பேசிய நடிகை சாக்‌ஷி, இந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் பங்கேற்று மகிழுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். நவராத்திரி என்றாலே, கொலு, நடனம், கலை நிகழ்ச்சிகள் கொண்டாட்டங்கள் என ஒரு குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு கொண்டாடும் நிகழ்வு போன்று இருக்கும் என்றார்.  ஆண்டுதோறும் Country Club Hospitality and Holidays நிறுவனம் இந்த நவராத்திரி கொண்டாட்டத்தை விமர்சையாக கொண்டாடி வருவதாக கூறினார். 

Country Club Hospitality and Holidays நிறுவனம் பற்றி:

Country Club Hospitality and Holidays நிறுவனத்துக்கு இந்தியா மட்டுமின்றி, இலங்கை துபாய் போன்ற நாடுகளில் 53 இடங்களில் கிளைகள் உள்ளன. சுமார் 4 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இது இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட கிளப் என்று லிம்கா புக் ஆப் ரெக்கார்டு புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. 

விடுமுறைகளை குடும்பத்தினருடன் குதுகலமாக கொண்டாட Country Club ஒரு சிறந்த நிறுவனமாகும். கடந்த 2018 ம் ஆண்டில் மட்டும் சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் அவர்கள் விரும்பிய இடங்களில் விடுமுறை நாட்களை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.