எலக்ட்ரிக் ஆட்டோக்கள் சென்னையில் அறிமுகம்

போக்குவரத்து நெரிசலால் அதிகரித்து வரும் மாசு அளவை குறைக்கும் வகையில் ஆஸ்திரேலியா நாட்டுடன் இணைந்து எலக்ட்ரிக் ஆட்டோக்கள் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இந்தியாவில் அதிகரித்துவரும் வாகன நெரிசல் ஒரு புறம் என்றால், அவற்றால்
வெளியேற்றப்படும் மாசுவின் அளவு மற்றொருபுறம். நாளுக்கு நாள் வாகனங்கள் மூலம் அதிகரித்துவரும் மாசுவின் அளவை கட்டுப்படுத்தும் விதமாக M Auto குழுமம், ஆஸ்திரேலியா நாட்டில் சுற்றுப்பயணம் செய்து அங்கு ஆட்டோக்களில் பின்பற்றப்படும் முறைகள் என்ன என்பது குறித்து ஆராய்ந்தது. அதன் அடிப்படையில் அங்கு பின்பற்றப்படும்
எலக்ட்ரிக் ஆட்டோ முறையை இந்தியாவில் பின்பற்ற M Auto குழுமம் திட்டமிட்டது. அதன் அடிப்படையில், ஆஸ்திரேலியா நிறுவனத்தினருடன் இணைந்து முதல் முதலாக சென்னையில் எலக்ட்ரிக் ஆட்டோக்கள் இன்று சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது. 

சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எலக்ட்ரிக் ஆட்டோக்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இதில், ஆஸ்திரேலியா நாட்டின் பிளாக் டவுன் சிட்டி மேயர் ஸ்டீபன் பாலி கலந்து கொண்டு எல்க்ட்ரிக் ஆட்டோக்களை அறிமுகப்படுத்தினார். மேலும், கிண்டியில் இருந்து மயிலாப்பூர் கபாலீஸ்வர்ர் கோயில் வரையிலான இந்த ஆட்டோக்பளின் பேரணியையும் தொடங்கிவைத்தார். அப்போது M Auto குழும தலைவர் மன்சூர் அலிகான் உடன் இருந்தார். 

கிண்டி நட்சத்திர ஹோட்டலில் இருந்து கபாலிஸ்வர்ர் கோயில் வரையிலான இந்த விழிப்புணர்வு எலக்ட்ரிக் ஆட்டோக்களின் பேரணியில், ஆஸ்திரேலியாவின் பிளாக் டவுன் சிட்டி மேயர் ஸ்டீபன் பாலி, M Auto குழுமத்தின் CEO யாஸ்மின் ஜவஹர் அலி உள்ளிட்டோர் பயணம் செய்தனர். 

முன்தாக பேசிய M Auto குழும தலைவர் மன்சூர் அரிக்டர், சென்னையில் ஒரு லட்சம் ஆட்டோக்களும், தமிழகத்தில் 10 லட்சம் ஆட்டோக்களுக்கும் மேல் இயங்குகின்றன. இவ்ளவு ஆட்டோக்களின் இயக்கங்களால் வெளியேற்றப்படும் carbo-di-oxide ன் அளவு மட்டும் ஆண்டுக்கு 4 டன்களுக்கு மேல் என்கிறது புள்ளிவிவரங்கள். இந்த நிலையை மாற்ற என்ன நடவடிக்கைகளை நமது நிறுவனத்தின் மூலம் எடுக்கமுடியும் என்று நினைத்தபோதுதான், ஆஸ்திரேலியா நாட்டில் பின்பற்றப்படும் எலக்ட்ரிக் ஆட்டோ நடைமுறை நினைவுக்கு வந்தது. நம் நாட்டிலும் இது போன்ற எலக்ட்ரிகல் ஆட்டோவை கொண்டுவர திட்டமிட்டபோதுதான் ஆஸ்திரேலியா அரசும், அந்நாட்டு நிறுவனமும் இதற்கான முழு ஒத்துழைப்பை அளித்ததாக கூறினார். இந்த முயற்சி, வாகனங்களால் ஏற்படும் மாசுவின் அளவை குறைப்பது மட்டுமல்லாமல், பெண்கள் எலக்ட்ரிகல் ஆட்டோக்களை இயக்க வரு வாய்ப்பாக அமையும் என்றும் கூறினார். 

ஆட்டோக்களின் இயக்கத்தால் வெளியேற்றப்படும் மாசுவின் அளவை குறைக்க M Auto கொண்டுவந்த திட்டம்தான் எலக்ட்ரிக் ஆட்டோ. 10 திறமைவாய்ந்த பொறியாளர்களை கொண்டு, 2005 ஆண்டு உருவாக்கப்பட ஆட்டோக்கள், எலக்ட்ரிக் ஆட்டோகளாக மாற்றப்பட்டுள்ளன. மேலும், மற்ற ஆட்டோக்களைப்போல் 3 பேர் அமர்ந்து பயணம் செய்யலாம், அதிகப்பட்சமாக 70 கி.மீ. வேகத்திலும், மணிக்கு 100 கி.மீ. வேகத்திலும் இந்த ஆட்டோக்கள் இயங்கும் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பெண்களுக்கு வேலைவாய்ப்பை அதிகளவில் ஏற்படுத்தும் வகையில், பெண்களும் இயக்கும் வகையில் இந்த எலக்ட்ரிக் ஆட்டோ தயாரிக்கப்பட்டுள்ளன. M Auto குழுமம் சார்பில் செப்டம்பர் மாதத்தில் 100 ஆட்டோக்களை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆட்டோக்கள் மூலம் வெளியேற்றப்படும் corbon-di-oxide பெரும் அளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

எலக்ட்ரிக் ஆட்டோ பயன்படுத்துவதினால், மாசு அளவு குறைவதுமட்டுமில்லாமல், பெட்ரோல், டீசல் செலவுக்கு ஆகும் தொகையைவிட எலக்ட்ரிக் சார்ஜ் செய்யும் செலவு மிக மிக குறைவாகும். மேலும், ஸ்மார்ட் போன் சார்ஜ் செய்வதுபோல், இந்த எலக்ட்ரிக் ஆட்டோக்களையும் சார்ஜ் செய்யும் வகையில் எளிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.