ஆந்திராவின் விஜயவாடாவைத் தலைமையிடமாகக் கொண்டு, இந்தியாவின் 8 விமான நிலையங்களுக்கு ஏர் கோஸ்டா நிறுவனம் தினசரி 16 விமானங்களை இயக்கி வருகிறது. சமீபகாலமாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காதது உடபட பல்வேறு பிரச்சினைகளை ஏர் கோஸ்டா நிறுவனம் சந்தித்து வருகிறது. இந்நிலையில், பொருளாதார பிரச்சினைகள் காரணமாக ஏர் கோஸ்டா நிறுவனம் தனது விமான சேவையை தற்காலிகமாக இரண்டு நாட்கள் ரத்து செய்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில் “நாங்கள் இந்த பிரச்சினையைத் தீர்க்க முயற்சித்து வருகிறோம். இதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னேற்றமடைந்துள்ளன” என்றார். இரண்டு நாட்கள் கழித்து (மார்ச் 2) ஏர் கோஸ்டா நிறுவனம் வழக்கம்போல இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.