நின்று கொண்டு தண்ணீர் குடித்தால் வீட்டில் உள்ள பெரியவர்கள் திட்டுவார்கள், உடலில் ஒட்டாது என்று சொல்வதையும் கேட்டிருப்போம். அது ஏன் என்று தெரியுமா? ஏனெனில் நின்று கொண்டு நாம் தண்ணீர் குடித்தால், நமது உடம்பின் சிறுநீரகம், இரைப்பை குடல்பாதை போன்றவை பாதித்து, ஆர்த்திரிடிஸ் போன்ற பிரச்சனை வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
எனவே இனிமேல் நின்று கொண்டே அல்லது நடந்து கொண்டு தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து, உட்கார்ந்து குடிக்கும் பழக்கத்தை நாம் அனைவரும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் நின்று கொண்டு தண்ணீரைக் குடிக்கும் போது, நீரானது நமது குடலில் நேராக பாய்ந்து, குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது. இதனால் குடல் சுவர் மற்றும் இரைப்பை குடல் பாதை முழுவதும் பாதிக்கப்படுகிறது. மேலும் இதேபோல் நீண்ட நாட்கள் நின்றவாறு நீரைக் குடிப்பதால், இரைப்பை மற்றும் குடல் பாதையின் மீள்தன்மை அதிகரித்து, செரிமான பாதையில் செயல்பாட்டைக் குறைக்கிறது.
தண்ணீரை நின்றபடி அல்லது நடந்தவாறு குடித்தால், சிறுநீரகங்களின் வடிகட்டும் செயல்முறை குறைந்து, சிறுநீர்ப்பையில் உள்ள ரத்தத்தில் நச்சுக்கள் தங்கி, சிறுநீரகத்தின் செயல்முறையை முற்றிலும் பாதிப்படையச் செய்கிறது.
ஆய்வுகளின் மூலம் நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால், நமது உடலின் மூட்டுப் பகுதிகளில் உள்ள நீர்மங்களின் சமநிலைக்கு இடையூறை ஏற்படுத்தி, ஆர்த்ரிடிஸ் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
நாம் நின்று கொண்டிருக்கும் போது நமது உடம்பில் உள்ள சிம்பதெடிக் நரம்பு மண்டலமானது செயல்பட ஆரம்பிக்கும். இதனால் இதயத் துடிப்பு, ரத்த நாளங்கள், நரம்புகள், மன அழுத்தம், கல்லீரலில் இருந்து சர்க்கரை வெளியேற்றப்படுவது இது போன்றவை வேகமாக இயங்கும். எனவே நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.
குறிப்பு
உடலின் மெட்டபாலிசம் சீராக நடைபெற, போதிய அளவில் தண்ணீரை உட்கார்ந்து கொண்டு தான் குடிக்க வேண்டும். அதிலும் காலையில் எழுந்ததும் 3 டம்ளர் தண்ணீர், மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு முன்பு 3 டம்ளர் தண்ணீர், முக்கியமாக ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை ஒரு டம்ளர் தண்ணீர் என்று குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.