Skip to content
VTV 24×7

VTV 24×7

header-advertisement
  • Home
  • செய்திகள்
  • சினிமா
    • விமர்சனங்கள்
    • பேட்டிகள்
    • வீடியோ
  • டிரைலர் / டீசர்
  • போட்டோ கேலரி
by: vtv24x7Posted on: July 13, 2019

ஜெய் – அதுல்யா ரவி மீண்டும் இணையும் புதிய படம்

ஒரு திரை ஜோடி தங்கள் அபரிமிதமான கெமிஸ்ட்ரியின் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும்போது, அதே ஜோடியை மீண்டும் மீண்டும் திரையில் ஜோடியாக நடிக்க வைக்க அணுகுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் இதற்கு ஒரு விதிவிலக்கான விளக்கமாக மாறி வருகின்றனர். எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கும் ‘கேப்மாரி’ என்ற சமீபத்திய படம் ஒன்றில் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால், இந்த குறுகிய இடைவெளியிலேயே அறிமுக இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே இயக்கும் மற்றொரு படத்திற்காக அவர்கள் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

படத்தின் களம் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்து இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே கூறும்போது, “இது ஆக்‌ஷன், கிரைம் மற்றும் காதல் ஆகியவை கலந்த ஒரு படம். ஜெய்யின் கதாபாத்திரம், நம் சுற்றுப்புறத்தில் காணும் ஒருவரை போன்ற ஒரு யதார்த்தமான ஒரு மனிதரை போன்றது. இருப்பினும், சில கட்டாயமான சூழ்நிலைகள் நீதியை தனது கைகளில் எடுக்கும்படி அவரை கட்டாயப்படுத்துகின்றன. இது மகிழ்ச்சி, எனர்ஜி மற்றும் கோபமான இளைஞனையும் இணைக்கும் ஒரு கதாபாத்திரம். அதுல்யா ரவி ஜெய்யின் ஜோடியாக நடிக்கிறார். ஸ்கிரிப்டை எழுதிய உடனேயே, நாங்கள் உண்மையில் பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு நடிகையை தேடிக் கொண்டிருந்தோம். மேலும் அதுல்யா சரியானவராக இருப்பதாக உணர்ந்தோம்” என்றார்.

‘சீதக்காதி’ படத்தில் நடித்த வைபவ்வின் மூத்த சகோதரர் சுனில் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதால், அவர் இங்கே வில்லனாக நடிக்கிறாரா? என்று யூகம் வரலாம். அது குறித்து தெளிவுபடுத்தும் இயக்குனர் கூறும்போது, “இல்லை, அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வில்லனாக நடிக்க நாங்கள் இன்னும் யாரையும் இறுதி செய்யவில்லை” என்றார்.

இப்போது, இந்த படத்தில் நடிக்க பிரபல நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அவர்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். நெடுநல்வாடை புகழ் அஞ்சலி நாயர் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். சாம் சிஎஸ் (இசை), ஜே.பி.தினேஷ் குமார் (ஒளிப்பதிவு), வல்லினம், காஷ்மோரா, ஜூங்கா, மான்ஸ்டர் புகழ் விஜே சாபு ஜோசஃப் (படத்தொகுப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். ஹாலிவுட் நிறுவனமான ரெயின் ஆஃப் ஏரோஸ் என்டர்டெயின்மென்ட்டின் கிளை நிறுவனம் சார்பில் சுரேஷ் சுப்ரமணியம் தயாரிக்கும் இந்த படம் மதுரை மற்றும் கேரளாவின் சில அழகான இடங்களிலும் படமாக்கப்படும்.

Share this:

  • Twitter
  • Facebook
  • LinkedIn
  • Pinterest
  • WhatsApp
சினிமா

Post navigation

Previous PostPrevious EDUCATIONAL DEVELOPMENT DAY CELEBRATED AT VELAMMAL
Next PostNext பார்வையாளர்கள் எனது நடிப்பை எவ்வாறு எடுத்து கொள்வார்கள் என்ற ஒரு பதட்டம் எனக்குள் உள்ளது – நடிகர் தீரஜ்
Theme Mero Magazine by Kantipur Themes