தளபதியின் 45ஆவது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில தளபதி விஜய் மக்கள் இயக்கம் மற்றும் அனைத்து தொகுதி தலைவர்கள், இளைஞரணி தலைவர்கள், தொண்டரணி தலைவர்கள் தொகுதி நிர்வாகிகள், கிளை மன்ற இயக்கத் தலைவர்கள், உறுப்பினர்கள் ஒருங்கிணைத்து நேற்று செஞ்சி சாலையில் உள்ள பாரதிதாசன் திடலில் 12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்
அரிசி 1045 நபருக்கு தலா 5 கிலோ வீதமும், புடவை 945 பெண்களுக்கும், சர்க்கரை 445 நபருக்கு தலா 5 கிலோ வீதமும் ,பள்ளி மாணவர்களுக்கு 445 பேருக்கு ஸ்கூல் பேக், ஆடு ஒரு நபருக்கும் ,டிபன் கடை தள்ளுவண்டி ஒரு நபருக்கும், டிபன் பாக்ஸ் 545 நபருக்கும், சில்வர் பாத்திரம் 145 நபருக்கும் ,அயன்பாக்ஸ் 145 நபருக்கும், பிளாஸ்டிக் குடம் 145 நபருக்கும் ,விளையாட்டுப் பொருட்கள் கிரிக்கெட் செட் 3 குழுவிற்கும் ,வாலிபால் செட் 5 குழுவிற்கும் ,கேரம் போர்டு 5 நபருக்கும் ,
நோட்புக் 645 மாணவ மாணவிகளுக்கும் ,தனி நபர் காப்பீட்டு திட்டம் 145 நபருக்கும் ,தலைக்கவசம் 45 நபருக்கும் ,கடிகாரம் 245 நபருக்கும் ,பிளாஸ்டிக் பாக்ஸ் 545 நபருக்கும், புதுச்சேரியில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த 150 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தலா 5 ஆயிரம், 3 ஆயிரம், 2 ஆயிரம், கல்வி உதவித்தொகை தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க செயலாளர் சரவணன் மற்றும் புதுச்சேரி விஜய் மக்கள் இயக்க உறவுகள் முன்னிலையில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் புதுவை மாநில தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.