இந்தாண்டிற்கான சிறந்த போஸ்ட் ப்ரோடுக்ஷன்-க்கான இந்தியன் ரெக்கார்டிங் ஆர்ட்ஸ் அகாடமி விருது (Studio Of The Year – Post Production) Knack ஸ்டூடியோஸ்-க்கு கிடைத்துள்ளது. அதைப்பற்றி அந்நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த ராமானுஜம் கூறியதாவது:-
இந்த வெற்றிக்கு காரணமான நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரையுலகைச் சார்ந்த அனைவருக்கும் நன்றி. உங்களோட ஆதரவால் தான் எங்களுக்கு இந்த விருது கிடைத்தது. இதேபோல் நாங்கள் தொடர்ந்து கடினமாக உழைத்து இன்னும் பல விருதுகளை அடைவோம். இம்மாதத்தோடு (ஜுன் 2019) இந்நிறுவனம் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகின்றன.