ஜூன் 23 ம் தேதி நடைபெறும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நான் பாண்டவர் அணி சார்பில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டி இடுகிறேன். கடந்த காலத்தில் நாசர், விஷால், கார்த்தி தலைமையிலான நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு நடிகர் சங்கத்துக்கும் நலிந்த கலைஞர்களுக்கும் நல்ல பல சேவைகளை செய்து வருகின்றனர். ஆகவே நானும் அவர்களுடன் இணைந்து செயல்பட விரும்பி செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறேன்.
நடிகர் சஙகத்துக்கும் நடிகர், நடிக்கைகளுக்கும் நல்லது செயப்பவர்களுடன் இணைந்துள்ளேன். இதை சிலர் அரசியல் வண்ணம் பூசுவது வருத்தம் அளிக்கிறது. நடிகர் சங்கம் எங்கள் தாய் வீடு, அது அரசியலுக்கு அப்பாற்பட்டது. வெவ்வேறு அரசியல் கொள்கை உடையவர்கள் ஆரம்ப காலத்திலிருந்தே சங்கத்தில் உறுப்பினார்களாகவும் நிரர்வகிகளாகவும் இருந்து வந்துள்ள வரலாறு நாம் அறிவோம். புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் வெவ்வேறு அரசியல் கொள்கை கொண்டவர்கள்.
அவர்கள் இருவரும் நிர்வாகிகளாக இருந்த வேளையில் அரசியலை கலக்காமல் நடிகர் சஙகத்துக்காகவும் நடிகர்களின் நலனுக்காகவும் உழைத்து, நடிகர் சங்கம் அரிசயலுக்கு அப்பாற்பட்டது என்று அவர்கள் வழி காட்டினார்கள். அதை போல வெவ்வேறு அரசியல் கொள்கை உடையவராக இருந்தாலும், அரசியலுக்கு அப்பாற்பட்டு நடிகர் சஙகத்துக்காக நடிகர் நடிகைகளின் நலனுக்கக்காக உழைக்கும் ஒரு அணியுடன் சேர்ந்து நானும் பணியாற்ற ஆசைப்பட்டு பாண்டவர் அணியில் போட்டியிடுகிறேன்.
இதில் அரசியல் காலக்காதீர்கள் என்று அன்புடன் வேண்டுகிறேன். அரசியலை நாம் வெளியே வைத்து கொள்வோம். நாமும் நம்முடைய முன்னோர்களான புரட்சி தலைவரும் நடிகர் திலகமும் பயணித்த பாதையை பின்தொடர வேண்டும் என்று வேண்டுகிறேன். ”
நன்றி
# லதா சபாபதி