சூர்யா, சுற்றுச்சூழல் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றுவிட்டு, தனது கிராமத்தில் சமூக சேவையில் ஈடுபட்டுக்கொண்டு, இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இயற்கை விவசாயம் செய்தும் அதனை ஊக்குவித்தும் வரும் சூர்யாவால் பாதிக்கப்படும் வியாபாரிகள், அவருக்கு பிரச்சனை கொடுத்து, அவருடைய நிலங்களை சேதப்படுத்துகின்றனர்.
இந்த இழப்புகளையும், பிரச்சனைகளையும் சரிசெய்ய பாலா சிங் மூலம் MLA இளவரசுவை சந்தித்து சரி செய்கிறார். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்றால் அரசியலுக்கு வர வேண்டும் என்று உணருகிறார் சூர்யா. அடிப்படை உறுப்பினராக இளவரசுவின் கட்சியிலே இணைகிறார்.
இப்படி அரசியலில் சேரும் சூர்யாவிற்கு பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கிறார்? எப்படி தீர்வுகண்டு சரிசெய்கிறார்? மக்களுக்கு சேவை செய்யும் அரசியல்வாதியாக ஆனாரா? என்பதே NGK படத்தின் மீதிக்கதை