அவையில் எனக்கு நேர்ந்த கொடுமையை எங்கே போய் சொல்வது என சபாநாயகர் தனபால் வேதனை தெரிவித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடத்தக் கோரி திமுகவினர் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரின் கையைப்பிடித்து இழுத்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். மேசையின் மீதும் ஏறி இருக்கையை முற்றுகையிட்டு ரகளையில் ஈடுபட்டனர்.
இதனால் பேரவையை விட்டு வெளியேறிய சபாநாயகர் அவையில் எனக்கு நேர்ந்த கொடுமையை எங்கே போய் சொல்வது என வேதனையுடன் தெரிவித்துள்ளார். அவை விதிகளின் படிதான், அவையை நடத்த கடமை பட்டுள்ளேன் என்றும் சபாநாயகர் தனபால் கூறியுள்ளார். அவையில் நடந்த அமளியால் அவை ஒத்தி வைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் 1 மணியளவில் கூடியபோது பேரவையில் இருந்து திமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.