கல்லூரி மாணவராக ஜீவா, பெண்களின் மொபைல் போன்களை ஹேக்கிங் செய்து , அவர்களை பற்றிய ரகசியங்களை தெரிந்து கொண்டு அதன் மூலம் அவர்களை தன் வலையில் விழ வைக்கிறார். அப்படி பழக்கமானவர் தான் அனைகா சோடி.
ஹேக்கிங் செய்ய பயன்படுத்தப்படும் வைரஸ்க்கு பாட்ஷா என பெயர் வைக்கிறார். சில சமயங்களில் நண்பர்களுக்காகவும் பயன்படுத்துகிறார்.
இவருக்கு ஜோடியா நிக்கிகல்ரானி, வாயாடி பெண்ணாகவும், துறுதுறு பெண்ணாக வலம் வருகிறார்.
வில்லனும் இதே போல மொபைல் மற்றும் கம்ப்யூட்டர்களை ஹேக்கிங் செய்து, காதல் தோல்வியுற்றவர்களை, மன உளைச்சலுக்கு ஆளானவர்களை மிரட்டி, பயன்படுத்தி பணத்துக்காக கொலை செய்து மகிழ்கிறார்.
ஒருவரின் மனநிலையை பற்றி தெரிந்து கொள்ள அவர்களுடைய வாட்ஸ் அப், பேஸ்புக், ஸ்டேஸ்களை தொடர்ந்து கண்காணித்து தெரிந்து கொள்கிறார்.
இவருக்கு கீழே ஒரு ஹைடெக் பட்டாளமே வேலை செய்கிறது. இந்த கும்பலின் வலையில் ஜீவாவும் சிக்குகிறார்.
காதலியான நிக்கிகல்ராணியை கடத்தி வைத்து ஜீவாவை தற்கொலை செய்ய மிரட்டுகிறார் வில்லன்.
இறுதியில் அந்த ஹைடெக் கும்பலிடமிருந்து நிக்கிகல்ராணியை காப்பாற்றி, எப்படி தப்பித்தார்? அந்த ஹைடெக் கும்பலை என்ன செய்தார்? எப்படி அழித்தார்? என்பதே “கீ” படத்தின் மீதிக்கதை.
ஜாலியான கல்லூரி இளைஞராக ஜீவா, இவர் ஆரம்ப காட்சியில் பெண்களை பற்றி சொல்வது ஓவர்.
ஜீவாவின் அம்மாவாக சுஹாசினி. அப்பாவாக தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் ஓவர் ஆக்டிங்காகா தெரிந்தாலும், செண்டிமெண்ட் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.
நிக்கி கல்ராணி அழகாக வந்து துறுதுறு படபடவென நடித்துள்ளார். அனைகா, கிளாமரை அள்ளி தந்து ரசிகர்களை கிறங்கடிப்பது நிச்சயம்.
நண்பராக வரும் ஆர்.ஜே. பாலாஜி. வழக்கமான காமெடி டயலாக்குகளால் கவர்கிறார்.
கோவிந்த பத்மசூர்யா ஸ்மார்ட் வில்லனாக மிரட்டியிருக்கிறார்.
விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு பலம் என்றே சொல்லலாம். காதோரம் பாடல் மனதை வருடுகிறது.
செல்போன் தான் எல்லாம் என்று இருக்கும் இன்றைய இளைஞர்களுக்கு சரியான பாடம் புகட்டியிருக்கிறார் டைரக்டர் காலீஸ். அவருக்கு வாழ்த்துக்கள்.
இன்றைய வளர்ந்து வரும் டெசிக்னலாஜியை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தாமல், பெண்களையும், சமுதாயத்தையும் அழிக்கும் நாச வேளைக்கு பயன்படுத்தும் இளைஞர்களின் மனதை திறக்குமா இந்த “கீ“.