தளபதி விஜய் நடிப்பில் A .R முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த சர்கார் திரைப்படம் மாபெரும் வெற்றியையும் , வசூல் சாதனையும் படைத்த படம். இந்த படத்தில் ஒருவர் ஓட்டை மற்றொருவர் கள்ள ஒட்டு போட்டுவிட்டால் , 49 P தேர்தல் விதிப்படிதேர்தல் அலுவரின் உத்தரவின் பேரில் வாக்களிக்கலாம் என்ற நல்ல செய்தி மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்பட்டது.
இந்த நிகழ்வு தற்போது நெல்லை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.நெல்லை மாவட்டம் பணகுடி வாக்கு சாவடி எண் 48 ல் மணிகண்டன் என்பவர் ஓட்டை மற்றறொருவர் கள்ள ஒட்டுபோட்டதை தொடர்ந்து ,மணிகண்டனுக்கு 49 P தேத்தல் விதிப்படி வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.இது இப்படத்திற்கு கிடைத்த உண்மையான வெற்றி என்று சொல்லலாம்.