விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் 5

தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான நிகழ்வுகளில் ஒன்றான ‘விஜய்
டெலிவிஷன் அவார்ட்ஸ். தற்பொழுது புதுப்பொலிவுடன் 5 வது விஜய் டெலிவிஷன்
அவார்ட்ஸ் என ஏப்ரல் 6 சனிக்கிழமை அன்று EVP பிலிம் சிட்டியில், பிரமாண்டமாக
அரங்கேறியுள்ளது.

விஜய் தொலைக்காட்சி எப்பொழுதும் திறமைகளை கொண்டாட தவறியதேயில்லை.
இந்த நிகழ்ச்சியின் மூலம் இதுபோன்ற தன் சின்னத்திரைக் கலைஞர்களை பாராட்டி
பறைசாற்றியிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் பல மதிப்புமிக்க விருதுகள் உள்ளன- சிறந்த நடிகர் -நடிகை, சிறந்த
நடிகர், பேவரைட் குடும்பம், சிறந்த தொடர் போன்ற பல விருதுகள்
வழங்கப்படவுள்ளன.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது நம் அனைவரின் பேவரிட் தொகுப்பாளர்கள்
DD மற்றும் மா கா பா ஆனந்த் இந்த நிகழ்ச்சியில் பல நட்சத்திர பெர்பாமன்சுகள் அரங்கேறியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து ஒரு குடும்பமாக பெர்பாம் செய்துள்ளனர்.
இதில் ஒரு குடும்பத்தில் இருக்கும் அன்பு, பிரச்சனைகள், உணர்ச்சிகளை பற்றி
அமையும். மேலும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடர்களின் நட்சத்திரங்களும் ஒரு
கிளாசிக் பெர்பாமன்ஸை அளித்துள்ளனர். நமக்கு பிடித்த விஜய் தொடர்கதைகளை
கலாய்த்து ஒரு கலகலப்பான ஒரு ஆக்ட் செய்யவுள்ளனர்.

தமிழ் தொலைக்காட்சியின் மிக பிரபலமான ஜோடி சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா ,
இவர்கள் சின்னத்திரையிலும் செரி நிஜத்திலும் செரி ஒரு பிரபலமான காதல் ஜோடியாக வலம்வருகின்றனர்.

சென்ற விஜய் அவாட்ஸில் அவர்கள் காதலிக்கிறார்களா என்ற கேள்வி நிகழ்ந்தது இன்ற விஜய் அவார்ட்ஸில் அதை உறுதி செய்து அடுத்த படியாக நிச்சயம் செய்துகொள்கிறார்கள்.

இந்த செக்மென்டை தவறாமல் பாருங்கள். அமாம் நீங்கள் கேட்டது நிஜம்தான்.
இப்படி பல பெர்பாமென்சுகள் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தேசப்பற்று
கலந்த ஒரு பெர்பாமன்ஸை நமது விஜயின் பிரபல நடன கலைஞர்கள் பெர்பாம்
செய்யவுள்ளனர்.

மேலும், உங்களுக்கு மிகவும் விருப்பமான நட்சத்திரங்கள் யார் யார் எந்த விருதை
பெற்றிருப்பார்கள் என்பதை கெஸ் செய்யுங்கள் என்பதை கெஸ் செய்து
கொண்டிருங்கள். இந்த நிகழ்ச்சி கலகலப்பு மிகுந்த உணர்ச்சி மிகு தருணங்களை
கொடுக்க வருகிறது.

மேலும் நமது சின்னத்திரை நட்சத்திரங்கள் ஒன்றுகூடி கொண்டாடிய இந்த மாபெரும்
விழாவை கூடிய விரைவில் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.