அரசு பள்ளிகளுக்கு 10 லட்சம் இலவச நாப்கின் பேட்

சுகாதாரமான வாழ்வியலை  பெண்களுக்கு வழங்கும் வகையில் ஜியோ இந்தியா பவுண்டேஷன் சார்பில் அரசு பள்ளிகளுக்கு பத்து லட்சம் இலவச சாணிடரி நாப்கின் பேட் வழங்கப்பட்டது. பயன்பாட்டுக்குப் பிறகு நாப்கின்களை எரித்து சாம்பலாக்கும் இந்திரங்களும் வழங்கப்பட்டன. 

வி.ஜி.பி.சந்தோஷம் மற்றும் ஆச்சி குழும நிறுவனர் ஐசக் இருவரும் இத்திட்டத்தை தொடங்கிவைத்தனர். தொழில் துறைகளில் சாதனை படைத்த 24 பெண்களுக்கு ஜியோ இந்தியா பவுண்டேஷன் சார்பில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.

பேரழகி விருதுகளை விஜிபி குழுமத் தலைவர் வி.ஜி.சந்தோசம், ஆச்சி குழுமத் தலைவர் ஏ.டி.பத்மாசிங் ஐசக், கால்ஸ் குழும இயக்குனர் ராஜசேகரன் சிவப்பிரகாசம், கால்ஸ் நிறுவன வணிகப் பிரிவுத் தலைவர் உப்பிலியப்பன் கோபாலன், அனிதா பங்காரப்பா, நடிகைகள் பிரியதர்ஷினி, சாஸ்வதா உள்ளிட்டோர் பங்கேற்று விருதுகளை வழங்கினர். விழாவில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.