மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் பங்கேற்ற வாக்காத்தான்

மார்ச் மாதம் முழுவதும் 10 லட்சம் பேருக்கு இலவச சாணிடரி நாப்கின் பேட் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நடைபெற்றது. ஜியோ இந்தியா பவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற துவக்க விழாவில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் வழங்கப்பட்டன. சென்னை முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இலவச நாப்கின் வங்கி துவங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயன்பாட்டுக்கு பிறகு சாணிடரி பேட்களை சாம்பலாக்கும் இயந்திரமும் வைக்கப்பட உள்ளது.

இந்தியாவில் சாணிடரி பிரச்சனை காரணமாக 5 லட்சத்து 17 ஆயிரம் பெண்கள் பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது. இந்தப் பிரச்சனையை சரிகட்டும் வகையில் பெண்களுக்கு சாணிடரி நாப்கின்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக ஜியோ இந்தியா பவுண்டேஷன் செயல்பட்டுவருவதாக அதன் தலைவர் பிரியா ஜெமிமா தெரிவித்துள்ளார்.

பெண்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவிகள் பங்கேற்ற வாக்காத்தான் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கால்ஸ் நிறுவன இயக்குனர் ராஜசேகரன் சிவபிரகாசம், கால்ஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தலைவர் உப்பிலியப்பன் கோபாலன், ஒய்.எம்.சி.ஏ . பொது செயலாளர் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.