ஜேப்பியார் ஐகான் விருது – 2019

அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட ஜேப்பியார் பொறியியல் கல்லூரி மிகக் குறுகிய காலத்தில் உயரத்தை தொட்டுள்ளது. சிறந்த தொழில்நுட்ப கல்வியை வழங்கும் ஜேப்பியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மனதிலும் இடம்பெற்றுள்ளது. புகழ்பெற்ற ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையில் இருந்து 2001 ஆகஸ்ட் 15-ல் பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டது. தொழிலதிபர், கல்வியாளர், கொடைவள்ளல் டாக்டர் ஜேப்பியார் தொழில்நுட்ப கல்வி துறையில் 30 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார்.
புகழ்பெற்ற ஜேப்பியார் பொறியியல் கல்லூரி ஜேப்பியார் ஐகான் விருதை ஆண்டுதோறும் வழங்கிவருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் தொழில்முனைவோர், பல்வேறு துறைகளில் சாதனை படைத்து நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர்களுக்கு விருது வழங்கி ஜேப்பியார் அங்கீகரித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான ஐகான் விருதுக்கு வெவ்வேறு துறைகளில் சாதனை படைத்த 10 பேரை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கவுரவித்துள்ளது.
விருதுகளை ஷார்ஜா இளவரசி ஷெய்கா ஹெண்ட் பைசல் அல் குவாஸ்மி, ஜேப்பியார் குழும தலைவர் ரெஜினா முரளி, முரளி ஆகியோர் வழங்கினர்.
விருது பெற்றவர்கள்:
1.டாக்டர் சந்தோஷ்பாபு, முதன்மை செயலாளர்
2.லட்சுமி நாராயணன், தலைவர், ஐ.சி.டி. அகாடமி
3.நவாப்ஸதா முகமது ஆசிப் அலி
4.உதயசங்கர், நாஸ்காம்
5. அருண் கிருஷ்ணமூர்த்தி, சூழலியலாளர்
6.வழக்கறிஞர் சஞ்சய் ராமராமசாமி
7.ரமாசிங்கம் பல்லி, CDO Atoms Syntel
8.நவீன் ராஜா ஜேக்கப், சர்வதேச வாலிபால் வீரர்
9.ஜி.வி.பிரகாஷ், நடிகர்