புற்றுநோய் அறுவைசிகிச்சைக்கு பின்னும் தாய்மை

இந்தியாவிலேயே முதல் முறையாக வாடகைத்தாய் முறையில் இடமாற்று அறுவை சிகிச்சை செய்த கருவகத்தில் இருந்து கருமுட்டையை வயிற்று புறதோலின் வழியே உறிஞ்சி எடுத்து பெண் குழந்தைபிறப்பு.

27 வயதுடைய, திருமணமாகி 3 வருடங்கள்  2014 வருடம் (21/7/2014) கர்ப்பப்பை மற்றும் ஒரு கருவகத்தை நீக்கிவிட்டனர். குழந்தை பிறப்பு மற்றும் மகளிர் நலத்தினை கருத்தில் கொண்டு ,பிறகு அதற்கு ரத்தஓட்டம் சீராக உள்ளதா என்பதையும் தக்க பரிசோதனை செய்து உறுதி செய்ததுக்கொண்டனர்.

இந்த பெண்மணிக்கு எங்கள் மருத்துவமனையில் கருவகத்தை ஊக்குவிக்கும் ஊசிபோட்டு கருமுட்டையை வளரசெய்து, உறிஞ்சி எடுத்து கணவரின் விந்தணுவுடன் இணைய செய்து, சோதனைக்குழாய் குழந்தை சிகிச்சை முறையில் வாடகை தாய்கருப்பையில் செலுத்தி, அதன்மூலம் 16/2/2019 அன்று மாலை 5:26 மணிக்கு, பெண்குழந்தை பிறந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் பதிவுசெய்வதில் ஜிஜிமருத்துவமனை மிகுந்தபெருமைஅடைகிறது. குழந்தை நலமாக 2.62 kg எடையுடன்உள்ளது.

 இந்த மாதிரி கருவக இடமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு “லாப்ராஸ்கோப்பி” முறையில் வயிற்று புறத்தின் வழியாக மட்டுமே கருமுட்டையை உறிஞ்சி எடுத்து இருப்பதாக மருத்துவ இதழ்களில் ஆராய்ச்சி கட்டுரைகள் வெளிவந்துள்ளன. . 

ஆனால் இந்த பெண்மணிக்கு கருமுட்டையை வலதுபுற வயிற்று பகுதியின் தோல் வழியே ஒலியதிர்வு கருவி (ஸ்கேன்) உதவியுடன் கருமுட்டையை உறிஞ்சி எடுத்து இருப்பது இதுவே முதல் முறையாகும்.

புற்றுநோய் ஆரம்ப நிலை மற்றும் பாதித்தவர்கள் அந்த சிகிச்சைக்கு செல்வதற்கு முன்பு அவர்களுடைய

  1. கருமுட்டை,
  2. இணைந்த கரு மற்றும்
  3. விந்தணுக்களை

பலவருடங்கள் உறைய வைத்து சேமிக்கலாம். இவைகள் மட்டுமே பல வருடங்களாக சிகிச்சை முறையில் இருந்து வருகிறது. இதன் மூலமாக ஆரோக்கியமான குழந்தைகள் உலகம்முழுவதும் பல பிறந்துள்ளன.

ஆனால் இப்போது

  1. கருவகத்தை வயிற்று புறத்தின் உட்பகுதியில் ரேடியேஷன் பாதிக்காத அல்லது குறைந்த அளவு பாதிப்பு ஏற்படக்கூடிய இடத்தில் இடமாற்று சிகிச்சை முறையில் வைத்துக்கொள்ளலாம்.
  2. கருவக திசுவினை பதப்படுத்தி அதனை மீண்டும் புற்றுநோய் சிகிச்சைக்கு பின்மாற்று அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பொருத்திக்கொள்ளலாம். இந்த கருவக திசு உறைய வைத்தமுறைமூலம் 2004 ஆம் ஆண்டு டாக்டர் ஜாக்கஸ்டோன்னஸ் (Dr Jacques Donnez from Saint-Luc in Brussels) குழந்தை பிறக்க செய்துஉள்ளார்.சவால்கள்:
  1. இந்த கருவக மாற்று அறுவை சிகிச்சை யினால் ஒரு சில நேரத்தில் ரத்த ஓட்டம் சரியாக செயல்படாமல் போவதுண்டு.
  2. கருவக இடமாற்று அறுவை சிகிச்சையினால் ஒரு சில சமயத்தில் முதிர்ந்த கருமுட்டையை உறிஞ்சி எடுப்பது சவாலாகவே இருக்கும்.

நன்மைகள்:

கருவக இடமாற்று அறுவை சிகிச்சையினால் சொந்த மரபியல் குழந்தையை பெற்றெடுக்க இயலும்.இந்த முறைபுற்றுநோய் ஆரம்ப நிலை மற்றும் பாதித்தவர்களுக்கு ஒரு வர பிரசாதமாகவே இருக்கும்.ஜிஜி மருத்துவமனை இப்போது கருவக திசு பதப்படுத்துதல் முறையில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது.