‘சித்திரம் பேசுதடி 2′ விமர்சனம்

சுப்பு பஞ்சுவும், ராதிகா ஆப்தேவின் கணவரும் பிசினஸ் பார்ட்னராக இருக்கின்றனர். ராதிகா ஆப்தேவின் கணவரை ரவுடிகளாக இருக்கும் அசோக்கும், விதார்த்தும் கொலை செய்ய முயற்சிப்பதை கயாத்திரியின் காதலர் பார்த்து விட்டு போலீசிடம் புகார் செய்கிறார்.

இவருக்காக வீட்டை விட்டு வந்து காத்திருக்கும் கயாத்திரியின் பேக்கை பிளேடு சங்கர்,நிவாஸ் திருடி சென்று விடுகிறார்கள். இதனால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து விட முடிவெடுக்கிறார் காயத்திரி. பேக்கை எடுத்துக்கொண்டு தான் போக வேண்டும் என்பதால் காதலரிடம் பேக்கை கண்டுபிடித்து தரும்படி கேட்கிறார். அவரும் சங்கர்,நிவாஸ் தேட ஆரம்பிக்குறார்.

அதே சமயம் காயத்ரியின் காதலரை கொலை செய்ய அசோக் தேடி வருகிறார். காயங்களுடன் உயிர் தப்பிக்கும் ராதிகா ஆப்தேவின் கணவரையும் கொல்ல முயற்சிக்கிறார்கள்.

இன்னொருபுறம் வீட்டு பிரச்னையில் இருக்கும் அஜ்மல் அரசியல்வாதி அழகம் பெருமாளின் வீடியோ ரகசியத்தை வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டுகிறார்.

காயத்ரியின் அப்பா, ஆடுகளம் நரேன், நிவாஸ் ஆகியோர் சேர்ந்து சுப்பு பஞ்சுவை ஏமாற்றி பணம் பறிக்க முயற்சி செய்கிறார்கள்.

அசோக், ராதிகா ஆப்தேவின் கணவரை கொள்கிறாரா? காயத்ரியின் காதலர், அசோக், விதார்த்தை போலீசில் மாட்டிவிட்டாரா? அஜ்மலுக்கு பணம் கிடைத்ததா? என்பதே சித்திரம் பேசுதடி ௨ படத்தின் மீதிக்கதை.

விதார்த், அசோக், அஜ்மல், நிவாஸ், பிளேடு சங்கர், ராதிகா ஆப்தே, காயத்ரி, சுப்பு பஞ்சு, அழகம் பெருமாள், ஆடுகளம் நரேன் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் டிவைன் பிராவோ.

இயக்குனர் ராஜன் மாதவ் வித்தியாசமான கதையை இயக்கியுள்ளார். ஆனால் சொல்ல வந்ததை தெளிவாக சொல்லாமல் சுற்றி வளைத்து சொல்லியிருப்பதால் சற்றே சலிப்பூட்டுகிறது.

‘சித்திரம் பேசுதடி 2′ ஓரளவுக்கு பேசுகிறது.