அண்ணா சாலை மன்றோ சிலையில் இருந்து தொடங்கிய நடை போட்டி தீவுத் திடலில் நிறைவுபெற்றது.
ஆண்கள், பெண்கள் என இருபாலரும் கலந்துகொண்டனர். எலைட், ஆர்டினரி என இருபிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் இந்தியா, சீன தைபே, மலேசிய நாடுகளை சேர்ந்த தலா 86 போட்டியாளர்கள் பங்கேற்றனர். காலை 6 மணிக்கு தொடங்கிய போட்டியை திருவல்லிக்கேணி உதவி ஆணையர் ஜெய்கிரண் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
வெற்றி பெற்றவர்களுக்கு விளையாட்டுத் துறை செயலாளர் தீரஜ்குமார் பரிசுகளை வழங்கி கவுரவித்தார். ஆண்கள் பிரிவில் கேரளாவை சேர்ந்த இர்பான் முதலாவதாக வந்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், மெடல் மற்றும் சான்றிதழ்களை பெற்றார்.தேவேந்திர சிங் (ஹரியானா) இரண்டாம் இடம் பிடித்தார். அவருக்கு ரொக்கப் பரிசு ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டது. சந்தீப்குமார் (ஹரியானா) மூன்றாம் பரிசு ரூ.20 ஆயிரம் பெற்றார்.
பெண்கள் பிரிவில் சௌமியா (கேரளா) முதலிடம், பியங்கா (உத்திரபிரதேசம்) இரண்டாம் பரிசு, ரவீணா (ஹரியானா) மூன்றாம் இடம் பிடித்து ரொக்கப் பரிசுகளைப் பெற்றனர்.