ராம்குமார், சாம்ஸ், சாரா, தினேஷ், தனுஷா, ஒய்.ஜி.மகேந்திரன், டெல்லி கணேஷ், சந்தானபாரதி, அஜய் ரத்னம் ஆகியோர் நடித்திருக்கும் படம் கோகோ மாக்கோ. பிரபல இசைக் கலைஞர்களின் ஆல்பங்களை வெளியிடும் கம்பெனிக்கு அருண்காந்த் ராப் பாடல்களை இசையமைத்து அனுப்புகிறார். பாடல்களுக்கு ஏற்றவாறு வீடியோவை ரெடி செய்தால் வெளியிடுவோம் என்று சொல்லி அனுப்பிவிடுகின்றனர்.
ராம்குமார்-தனுஷா காதல் ஜோடி Road Trip செல்கிறார்கள். அங்கே அவர்களுக்கே தெரியாமல் காதல் கலந்த காட்சிகளையும் பயண அனுபவங்களை வீடியோவாக எடுத்து சாம்ஸ், அருண்காந்திற்கு அனுப்புகிறார். இந்த வீடியோவை அந்த கம்பெனி வெளியிடுகிறதா? இல்லையா? என்பதே கோகோ மாக்கோ படத்தின் மீதிக்கதை.
காதல் ஜோடிகளாக நடித்துள்ள ராம்குமார்-தனுஷா நடிப்பில் ஓகே என்றாலும் கெமிஸ்ட்ரி சரியில்லை என்றே தோன்றுகிறது. காமெடி என்ற பெயரில் சாம்ஸ் ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்.
காதலோடு, இசைக்கும் இளசுகளின் முயற்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்ததற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
கோகோ மாக்கோ காதலுக்கும் இசைக்கும் புதிது.