பாண்டி, சரண், பிரித்விராஜ், கிஷோர், ஸ்ரீராம், ஆகிய நால்வரும் குற்றம் செய்துவிட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். பாண்டியை சிறைக்குள்ளேயே கொன்று விடுகிறார் பிருத்வி.
பிறகு ஜெயிலில் இருந்து விடுதலையாகி விடுகிறார். தன் நண்பனை கொன்ற பிரித்விராஜை பழிவாங்க நினைக்கிறார் சரண்.
பிரித்விராஜை கொள்ள சிறையிலிருந்து தப்பிக்க நினைக்கும் சரணுக்கு, கிஷோர் உதவி செய்து இருவரும் இருவரும் சிறையிலிருந்து தப்பிக்கிறார்கள்.
இவர்கள் ஜெயிலுக்கு செல்ல காரணம் என்ன? ஜெயிலில் இருந்து தப்பித்து பிரித்வியை சரண் கொன்றாரா? போலீஸ் என்ன செய்தனர்? என்பதே படத்தின் மீதிக்கதை.
சரண், பாண்டி, பிரித்வி, ஸ்ரீராம் மற்றும் கிஷோர் வழக்கமான நடிப்பை அளவாக கொடுத்துள்ளனர்.
ஜோக்கர் படத்தில் நடித்த அபிராமி அவர்கள் இதில் சரணின் அக்காவாக நடித்துள்ளார்.
நீரஜா மற்றும் ஆய்ரா என இரண்டு அழகான நாயகிகள், சில காட்சிகளே வந்தாலும் சிறப்பான நடிப்பு,
ஆத்தாடி, யாயும் பாடல்கள் ரசிகர்களை ஈர்க்கிறது. நிரண் சந்தரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது.
சகா மற்றொரு நட்பு படம்