“விஜய் சேதுபதி” நடிக்கும் படத்திற்கு இசையமைக்கும் விவேக்-மெர்வின்

பல வெற்றி படங்களை தயாரித்த  பாரம்பரிய நிறுவனமான  “விஜயா புரொடக்க்ஷன்ஸ்” சார்பில் B.பாரதி ரெட்டி தயாரிப்பில் மக்கள்  செல்வன்   “விஜய் சேதுபதி”  நடிக்கும்  புதிய படத்தை இயக்குனர்  விஜய்  சந்தர் இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் நடிகை ராஷி கண்ணா ,காமெடியன் / நடிகர் சூரி ஆகியோர்  இப்படத்தில் நடிக்கிறார்கள்  .

மேலும் தற்போது இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர்  இப்படத்திற்கு இசையமைக்க உள்ளனர்.

விவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன் ஆகியோர் வடகறி படத்தில் அறிமுகமாகினர்.அந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.அதனை தொடர்ந்து புகழ் ,டோரா , குலேபகாவலி ஆகிய படங்களில் இசையமைத்தனர்.அனைத்து பட பாடல்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர்களின் இசையில் வெளிவந்த ஒரசாத பாடல் இளைஞர்களிடையே வேற லெவல் பாராட்டுக்களை பெற்றது. மேலும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் 2 படங்களில் விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைக்க உள்ளனர்.

இப்பொழுது விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.