ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது தவறு – விஜயகாந்த்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தடியடி நடத்தியது தவறு என்று விஜயகாந்த் கூறினார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கோயம்பேடு அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது தவறு. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசுதான் நடவடிக்கை எடுத்தது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படம் வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் போராட்டத்தில் பின்லேடன் படம் வைக்கப்படவில்லை. பின்லேடன் படம் இருந்ததாக எந்த ஊடகங்களிலும் வாட்ஸ் அப்பிலும் வரவில்லை. அரசு தப்பிப்பதற்காகவே இதேபோல் கூறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.