ஒரே நேரத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபடுவதால் மட்டுமே ஒருவரின் பன்முகத்தன்மை மேம்படும் என்று கூறமுடியாது. மிகச்சரியான உழைப்பும், ஆற்றலுமே அத்தகைய தரத்தை தரும். அதற்கேற்றாற்போல பல பன்முகத்திறமையாளர்களை தன் வாழ்நாளில் தமிழ் சினிமா அடையாளம் கண்டுள்ளது.அத்தகைய திறமையை உள்ளடக்கிய நடிகர் ஹரிஷ்கல்யாண் , தனது அடுத்த வரவான “இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் ” படத்தின் , “ஏய் கடவுளே” என்ற பாடலின் மூலம் பாடகராகிறார்.
சமகாலத்தின் காதலில் சிக்கிய இளைஞனின் மனநிலையை பற்றி விவரிக்கும் இப்பாடலை , சாம்.c.s. இசையில், இயக்குனர் ரஞ்சித் ஜெயகோடி எழுதிருக்கிறார். மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் கர்ஜிக்கும் குரலும் இப்பபாடலுக்கு மிகப்பெரிய பலம் என்றே கூறலாம்.
தான் தடம் பதிக்கும் அனைத்திலும் வெற்றியை ஈட்டும் நடிகர் ஹரிஷ்கல்யாண் ” ஏய் கடவுளே” பாடலின் வரிகளுக்கு பங்களித்திருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.
“இப்பாடலின் ரேகார்டிங் ஒரு புதுமையான அனுபவம்.முதலில் நாங்கள் தனி வார்த்தைகளில் அமைத்த பாடல், பின்னர் முழுவடிவத்தை பெற்றது மிகவும் மகிழ்ச்சியான தருணம். “ஏய் கடவுளே” எனது முதல் முழுநீள பாடலாக இருக்கும். எதிர்பார்பையும் மீறி ரசிகர்கள் அளித்திருக்கும் இந்த வரவேற்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சி யளிக்கிறது” என்றார் கதையின் நாயகன் ஹரிஷ்கல்யாண்.
ரொமாண்டிக் ட்ரீட் ஆக உருவாகும் “இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும்” திரைப்படத்தை இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கோடி இயக்க , மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கப்பா தயாரிக்கிறார்