தமிழ் பாடல் முதன்முறையாக வீடியோ பாடல் பட்டியலில் நம்பர் 1 இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறை

யுவன் ஷங்கர் ராஜா எப்போதும் “வைரல் ஹிட்ஸ்” கொடுக்கும் இசை ஐகானாக தன்னை அடிக்கடி நிரூபித்து வந்திருக்கிறார். அவரது மெலோடி பாடல்களாகட்டும், மேற்கத்திய அதிரடி பாடல்களாகட்டும், லோக்கல் குத்துப் பாடல்களாகட்டும் எல்லாமே நம்முடைய விருப்பமான பாடல்களின் பட்டியல்களில் இடைவிடாமல் முக்கிய இடத்தை பிடித்தே வந்திருக்கிறது. 2018 ஆம் ஆண்டில் அடுத்தடுத்து ஹிட் பாடல்களை (ராஜா ரங்குஸ்கி, பேரன்பு, சண்டக்கோழி 2 மற்றும் பியார் பிரேமா காதல்) வழங்கிய யுவன், ஆண்டின் இறுதியில் ‘மாரி 2’ படத்தின் மூலம் இசை ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தை அளித்திருக்கிறார். குறிப்பாக ‘ரௌடி பேபி’ கடந்த ஆண்டில் தமிழ் சினிமாவின் பெரிய படத்தின் பிரமாண்ட பாடலாக மட்டுமல்லாமல், யூடியூபில் மிகவும் குறுகிய காலத்தில் (2 வாரம்) 100 மில்லியன் பார்வைகளை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறது.
தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜாவின் எனர்ஜி ததும்பும் இசையில் ரௌடி பேபி’ பாடலானது, கேட்போரையும், பார்ப்போரையும் ஒரே நாளில் மயக்கியிருக்கிறது. யூடியூபில் தமிழ் பாடல்களில் நம்பர் 1 இடத்தை பிடித்ததன் மூலம் உலகளாவிய மேடையில் தமிழ் இசையை மீண்டும் உலக அளவில் கவனிக்க வைத்திருக்கிறது. ஒரு தமிழ் பாடல் முதன்முறையாக வீடியோ பாடல் பட்டியலில் நம்பர் 1 இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மாரி 2 வெறும் 3 பாடல்களை கொண்ட யுவன் ஷங்கர் ராஜாவின் ஒரு அரிய ஆல்பம் என்பதும், அந்த 3 பாடல்களுமே வைரல் வெற்றியை பெற்றுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 
‘கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் மற்றும் கேட்க விரும்பும் இசை ஆல்பம்’ என ஒவ்வொருவரின் விருப்ப பட்டியலிலும் உள்ள படங்களை பார்க்கும்போது, யுவன் ஷங்கர் ராஜாவுக்கு 2019 ஆண்டு ஒரு  இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் மிகவும் சிறப்பான ஆண்டாக இருக்கும் என்று தெரிகிறது. கழுகு 2, கண்ணே கலைமானே, சூப்பர் டீலக்ஸ், விஜய் சேதுபதி – சீனு ராமசாமி படம், சிவகார்த்திகேயன் – பி எஸ் மித்ரன் படம், STR – வெங்கட் பிரபுவின் மாநாடு, அஜித்குமாரின் பெயரிடப்படாத பிங்க் ரீமேக் படம், குருதி ஆட்டம், ஆலிஸ் மற்றும் சில திரைப்படங்கள் அவரது பட்டியலில் உள்ளன. ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸின் சார்பில் ஒரு தயாரிப்பாளராக விஜய் சேதுபதி – சீனு ராமசாமி திரைப்படம், ஆலிஸ் மற்றும் பல்வேறு நிலைகளில் உருவாகி வரும் சில படங்களை தயாரித்து வருகிறார்.