கே.இ ஞானவேல் ராஜா அவர்களின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜு முருகன் அவர்களின் உதவி இயக்குனரான சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் மதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திருப்பதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள மெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிவகுமார், இயக்குனர் பாக்யராஜ் ஆகியோர் தலைமை ஏற்க இவர்களுடன் ஞானவேல் ராஜா அவர்களின் தந்தை ஈஸ்வரன், இயக்குனர் மாரி செல்வராஜ், லெனின் பாரதி, சிம்பு தேவன், எச். வினோத், நலன் குமாரசாமி, சிறுத்தை சிவா, மௌனகுரு சாந்தகுமார், எழில், கரு.பழனியப்பன், எஸ்.ஆர்.பிரபு, 2D ராஜசேகர், பாடகர் விஜய் யேசுதாஸ், சக்தி பிலிம்ஸ் பேக்டரி சக்திவேல், நடிகர் சன்னி ஜி, ரமேஷ் பாபு மற்றும் இப்படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
மாரி செல்வராஜ் :
ஜீவா மூலமாக தான் சரவணன் அவர்களை சந்தித்தேன். திறமையான அனுபவமுள்ள மனிதர் அவரின் அறிமுக படமான இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
சுவேதா திறமையான நடிகை நவாசுதீன் சித்திக் படத்தில் ஸ்வேதாவின் நடிப்பை பார்த்து வியந்து விட்டேன். தமிழ் சினிமாவில் அவருக்கு மிகப்பெரிய இடம் கிடைக்கும் .
ஹிட் கொடுக்கும் பிரபலங்கள் அனைவரும் இந்த படத்தில் உள்ளார்கள். படம் பழைய நினைவுகள் மீண்டும் நம் நினைவிற்கு கொண்டு வரும்.
படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றார்.
லெனின் பாரதி :
படத்தின் பாடல்கள் அனைத்தும் நம்மை நாடோடிகளாகவே மாற்றுகின்றன. இந்த படம் அற்புதமான கதை என பாராட்டினார்.
எச். வினோத் :
புதுமையான கதை இது. படத்தின் ட்ரைலர், பாடல்கள் என அனைத்தும் சூப்பராக அமைந்துள்ளது. நிச்சயம் வெற்றி படமாக அமையும்.
நலன் குமாரசாமி :
சரவணனின் இயக்கம் நிச்சயம் விதியாசனாக இருக்கும். ஆர்டிஸ்ட்ஸ், டெக்னீசியன் என அனைவர் மத்தியிலும் நல்ல மதிப்பு கொண்டவர் என பேசினார்.
இயக்குனர் எழில் :
ராஜு முருகன் அண்ணனு சொன்னதும் இந்த நிகழ்ச்சிக்கு வரேன்னு சொல்லிட்டேன். சரவணன் லேட்டா வந்தாலும் சிறப்பான கதையோடு வந்திருக்காரு. பாடல், ட்ரைலர் என அனைத்தும் சிறப்பாக ஒரு நேர்த்தியான படமாக அமைந்துள்ளது.
விஜய் இயேசுதாஸ் :
சான் ரோல்டன் இசை பற்றி சொல்லவே தேவையில்லை. தற்போதைய தலைமுறைக்கு ஏற்றார் போல இருக்கும். பாடல்கள் உணர்வு பூர்வமாக அமைந்துள்ளன. எனக்கும் முதலில் பாட சிரமமாக இருந்தது. ஆனால் சான் ரோல்டன் ஒத்துழைப்பால் சிறப்பாக அமைந்துள்ளது.
ஞானவேல் ராஜா :
வெற்றிமாறன், பாண்டியராஜ் சார் ஆகியோர் அட்டகத்தி படத்தை ப்ரோமோட் செய்து வெற்றி பெற செய்தார்கள். அந்த படத்தில் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்தது.
அந்த எனர்ஜி தற்போது மீண்டும் இந்த படத்தில் கிடைத்துள்ளது.
சமுதாயத்தில் பேச தயங்கும் பிரச்னைகளை ராஜு முருகன் ஜிப்ஸியில் பேசியுள்ளார். அவரது சேவை தொடர வேண்டும்.
இந்த படத்திற்கு அவரின் பங்கு பெரிது. விழா நாயகன் சான் ரோல்டனின் இசைக்கு நான் அடிமை. இவர்களின் நட்பு தொடர வேண்டும் என கூறினார்.
செல்வா :
இளையராஜாவின் இசை எப்படி தனி விருந்தாக இருக்குமோ லாட்ஜ் போல் சமையல் கிங் ரங்கராஜ்.
முதல் முதலாக நடிக்க வந்துள்ளார். அவரின் உழைப்பு வெற்றியை கொடுக்கும் . எடிட்டர், டெக்னீஷியன் என அனைவரும் அற்புதமாக பணியாற்றி உள்ளனர். விக்னேஷ் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
எஸ்.ஆர்.பிரபு :
சர்க்கஸ் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த படம் எனக்கு அந்த அனுபவத்தை கொடுக்கும்.
கரு. பழனியப்பன் :
சரவணன், யுகபாரதி, ராஜு முருகன் ஆகியோர் கஷ்டப்பட்டு தான் வளர்ந்தார்கள்.
சரவணன் இயக்குனராக ஆடைப்பட்டு அவரது தம்பி ராஜு முருகனை இயக்குனராக்கினார். தற்போது சரவணனும் இயக்குனராகி விட்டார்.
இருப்பதலிலேயே கஷ்டமான தொழில் சமைப்பது தான். அதில் திறமை வாய்ந்தவர் ஹீரோ ரங்கராஜ். இந்த படத்திலும் அவர் அறுசுவை விருந்தாக படத்தை கொடுப்பார்.
தற்போது விஸ்வாசம் போன்ற குடும்ப படங்கள் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அந்த வகையில் இந்த படமும் இருக்கும்.
2D ராஜசேகர் :
ராஜி முருகன் ஜோக்கர் படத்தை போல இந்த படமும் இருக்கும். படத்தின் கதையை கேட்கும் போதே அருமையாக இருந்தது.
படத்தின் விசுவல் சூப்பராக உள்ளது.
சக்தி பிலிம்ஸ் பேக்டரி சக்திவேல் :
ஞானவேல் ராஜா 18 வருடமாக சினிமாவை காதலித்து வருகிறார். இந்த படம் வெற்றிப் படமாக இருக்கும்.
யுகபாரதி :
என்னுடைய கவிதை அரங்கேறும் நாள் இன்று. எனக்கு சினிமாவில் பலரை அறிமுகப்படுத்தியவர் சரவணன். சரியான நண்பர்.
ராஜு முருகன் தேசிய விருது வாங்கிய போது எனக்கு சரவணன் தான் நினைவிற்கு வந்தார்.
50, 60 ஆண்டுகளுக்கு பெயர் சொல்லும் இயக்குனராக சரவணன் இருப்பார்.
எனக்கு நல்ல சினிமா, அரசியல், கவிதை என அனைத்தையும் கொடுத்தது சரவணன் தான்.
திறமைகளை அறிந்து பராட்டுபவர் சிவகுமார். மாபெரும் திறமையும் கொண்டவர்.
இயக்குனர் பாக்யராஜின் உதவி இயக்குனராக வேண்டும் என்பது சரவணனின் ஆசை. அது நடக்கவில்லை. ஆனால் அவரது வாழ்த்து சரவணன் படத்திற்கு கிடைத்துள்ளது.
ராஜு முருகன் :
இது எனக்கு நெகிழ்ச்சியான மேடை. என்னை உருவாக்கியவர்கள் யுகபாரதியும் சரவணனும் தான் .
சரவணினின் கிரியேட்டிவிட்டி அளப்பரியது. ஜோக்கர், ஜிப்ஸி என என் அணைத்து படத்திற்கும் இவர்களின் பங்கு உண்டு.
கதை, வசனம் என என் பெயர் இருந்தாலும் இது சரவணனின் படம்.
DOB செல்வா மிகவும் திறமையானவர். அதனால் தான் ஜிப்ஸி படத்தில் அவரை ஒப்பந்தம் செய்தேன்.
மெஹந்தி சர்க்கஸ் படம் உருவாக முக்கிய காரணம் ஈஸ்வரன் மற்றும் ஞானவேல் ராஜா தான்.
இப்படம் எண்களின் தம்பி ஸ்டாலினுக்கு சமர்ப்பணம். அவர் தற்போது எங்களுடன் இல்லை.
சான் ரோல்டன் இசை தான் இப்படத்திற்கு முக்கியமான ஒன்று.
ஸ்வேதா :
இந்த படத்தில் நடிக்க வாய்பளித்த இயக்குனர், தயாரிப்பாளர் என அனைவர்க்கும் நன்றி.
ரங்கராஜ் :
இது எனக்கு முதல் மேடை. சரவணன் படத்தில் ஹீரோவானது மகிழ்ச்சி. இது கடவுள் கொடுத்த வரம். மீண்டும் அவருடன் இணைய ஆசைப்படுகிறேன்.
இயக்குனர் சரவணன் :
யுகபாரதி, கரு பழனியப்பன், ராஜு முருகனிடம் பேச கற்று கொள்ள வேண்டும். நலன் குமாரசாமிக்கு உறுதுணையாக இருக்க ஆசைப்படுகிறேன்.
ஒளிப்பதிவாளர், எடிட்டர் என அனைவரும் சிறப்பாக பணியாற்றினார்கள். சான் ரோல்டன் இசை படத்தை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
ஸ்வேதா இந்த படத்தில் கேரக்டராகவே வாழ்ந்துள்ளார்.
சான் ரோல்டன் :
சரவணன் சிறந்த படைப்பாளி. படத்தை அறிமுகப்படுத்த தலைப்பே போதும் அது இந்த படத்தில் சிறப்பாக அமைந்துள்ளது.
மக்களுக்கான தரமான படமாக மெஹந்தி சர்க்கஸ் இருக்கும்.
பாக்யராஜ் :
கரு. பழனியப்பன் சரவணினின் வாழ்க்கை வரலாற்றையே கூறி விட்டார். சினிமாவில் சாதித்த அனைவருடனும் சரவணன் பழகியுள்ளார்.
சரவணன் நிறைய விருதுகள் வாங்க வேண்டும். படத்தின் வெற்றி விழா கண்டிப்பாக நடக்கும். படம் உருவாக காரணமாக இருந்த ஞானவேல் ராஜா, ஈஸ்வரன் ஆகியோர்களுக்கு வாழ்த்துக்கள் என்றார்.
ராஜு முருகன் குக்கூ படம் பார்த்தேன். கதை, வசனம் அருமை. பார்வை இல்லாதவர்களையும் திறமையாக நடிக்க வைத்துள்ளார்.
இந்த படத்தில் யுக பாரதி வரிகள் பிரமாதம். சான் ரோல்டன் இசை அற்புதம்.
இளையாராவிற்கு இளையராஜா 75 விழா மட்டும் போதாது. இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்றார்.
சிவகுமார் :
ஈஸ்வரன் பெற்ற மகன், நான் பெறாத மகன் ஞானவேல் ராஜா. சூரியா, கார்த்தி மற்றும் பல நடிகர்களை வைத்து வித்தியாசமான படங்களை கொடுத்தவர் ஞானவேல் ராஜா. அந்த படங்களின் வரிசையில் மெஹந்தி சர்க்கஸ் படமும் இருக்கும் என்றார்.