“நீலம் புரொடக்சனஸ்” தயாரிக்கும் “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு” படப்பிடிப்பு தொடங்கியது

இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் புரடொக்‌ஷன்ஸ்” நிறுவனம் தயாரிக்கும் “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு” படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது.

தினேஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தினை, இயக்குநர் பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்குகிறார்.

“தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” மற்றும் “மகிழ்ச்சி” ஆகிய ஆல்பங்களின் இசையமைப்பாளர் தென்மா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். “கபாலி”, ” காலா” ஆகிய படங்களின் கலை இயக்குநர் த.ராமலிங்கம் இப்படத்தில் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார் பணியாற்றுகிறார்.

சென்னையில் இன்று தொடங்கிய படப்பிடிப்பை இயக்குனர் பா.இரஞ்சித் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர்.