கவ்ஸ் டெக்னோலாஜி சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பந்தம் தலைமை செயல் அதிகாரி சுமித் கங்குலி தகவல்

கவ்ஸ் நிறுவனத்தின் முதன்மையான மற்றும் சுயேச்சையான தனியார் பங்கு
முதலீட்டு நிறுவனமான பேசில் இன்வெஸ்டர்ஸ் வளர்ச்சியை நோக்கிய வணிகத்திற்கு
ஆதரவு அளித்து வரும் நிறுவனமாகும். இது தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள
நிறுவனங்களில்  முதலீட்டை அதிகரிக்கும் வகையில் உலகளாவிய முதலீட்டு 
நிறுவனங்களான கமிட்டெட் அட்வைசர்ஸ் மற்றும் நியு குவெஸ்ட் கேப்பிட்டல்
பார்ட்னர்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக கவ்ஸ்
டெக்னோலாஜிஸ் தலைமை செயல் அதிகாரி சுமித் கங்குலி தெரிவித்துள்ளார்.
கவ்ஸ் டெக்னோலாஜிஸ் நிறுவனத்தில் வரவுள்ள புதிய முதலீட்டாளர்கள்
நிறுவனத்தின் இந்தியா முழுவதுமான செயல்பாடுகளை பலப்படுத்துவதோடு
அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், தூரக்கிழக்கு நாடுகளில் தற்போதுள்ள
செயல்பாடுகளை மேலும்விரிவாக்கம் செய்வார்கள். இது எங்களது ஐபி மேம்பாடு மற்றும் வணிக வளர்சியை  பெரிதும் ஒருங்கிணைக்கும் என்று மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக்கொள்கிறோம்.

 டிஜிட்டல் மாற்றங்களில் நாங்கள் கவனம் செலுத்த கடமைப்பட்டுள்ளோம். ஏஐ,
பகுப்பாய்வு குறித்த முன்னறிவிப்புகள்,  ஆட்டோ மேஷன், தீர்வைகளை உருவாக்குதல்
ஆகியவை சந்தைக்கு சரியான நேரத்தில் தயாரிப்புகளை அனுப்பவும்,. வளங்களை
பயன்படுத்துவதை குறைத்தல் போன்ற ஆகிய வணிக நோக்கங்களை அடைய உதவும்.
எங்களது ஜிரோ இன்சிடென்ட் பிரேம்வோர்க், ஏஐஓ பிஎஸ் பிளாட்பார்ம் உள்ளிட்டவை
சாதனங்களின் செயல்பாட்டை அதிகாரிக்கும். பயன்படுத்துவோருக்கு உபயோகமாகவும், எதிர்பாரா நிகழ்வுகளை குறைக்கவும் உதவும். இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை  தத்து எடுத்துள்ளதுகுறித்து நேர்மறை எண்ணங்களை
கொண்டுள்ளோம். சென்னையின் முன்னணி நிறுவனமாக  உருவெடுக்க நாங்கள்
விரும்புகிறோம் என்று சுமித் கங்குலி கூறினார். 

அப்ளிகேஷன் மேனேஜ்ட் மெண்ட் சேவைகளுக்கான இன்டிலிஜென்ட்
ஆட்டோமேஷனில் முதலீடு செய்வது எப்படி  என்பது குறித்து கவ்ஸ் நிறுவனத்தின்
அறிக்கையை  இன்டிலிஜென்ட் ஆட்டோ மேஷன் துறையில் மென்பொருட்களை
உருவாக்குவதில் தனி சிறப்பு பெற்ற கார்ட்னர் சமீபத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. தகவல்
தொழில்நுட்ப  ஆட்டோமேஷன் சேவைகள்- சந்தை நிலவரங்கள், சர்வீசஸ் பீக்
மேட்ரிக்ஸ் மதிப்பீடு ஆகியவற்றில் கவ்ஸ் நட்சத்திர சாதனையாளர் என்று எவரெஸ்ட்
குழுமம் தனதுசமீபத்திய அறிக்கையில் பாராட்டியுள்ளது. அகாடெமியாவுடன்  கூட்டுசேர்ந்து தகவல்தொழில்நுட்ப தளத்தை மாற்றுதல், ஏஐ, பகுப்பாய்வை முன்கூட்டியே  அறிவித்தல், நவீன சாதனங்கள், ஆகிய துறைகளில்
வலுவான போட்டியை ஏற்படுத்தி  முக்கியமான புத்தாக்கத்தில் ஈடுபட கவ்ஸ்

கடமைப்பட்டுள்ளது. இந்தியா அடுத்த இஸ்ரேலாக மாறும் என்று சமீத் வலுவாக
நம்பிக்கை கொண்டுள்ளார்.  பாரம்பரிய தொழிலில் இருந்து  தொழிலாளர் பிரச்சனையே
இல்லாத ஆட்டோமேஷன் புத்தாக்கம், மற்றும் நவின சாதனங்களை சார்ந்திருக்கும்
தொழில் சேவைக்கு மாறுவதற்கு தற்போதுள்ள தொழில்நுட்பம் மற்றும் பூகோளரீதியாக
நிலவும் அரசியல் சக்திகள் ஆகியவை தடையாக உள்ளன என்றும் அவர் கூறினார். 
கவ்ஸ் தற்போது ஏஐக்கான மெஷின் லேர்னிங் அல்கோரிதம் உருவாக்க ஐஐடி
சென்னையில் உள்ள  ராபர்ட் போச் புத்தாக்க மையத்துடனும், கிரோட் லேக்ஸ்
இன்ஸ்டியூட் (ஜிஎல்ஐஎம்) கேசிஜி காலேஜ் ஆப் டெக்னோலாஜிஸ் ஆகியவற்றுடன்
இணைந்து வலுவான  மற்றும் உலகில் முன்னனி தொழில்நுட்ப தீர்வை உருவாக்கும்
நோக்கத்துடன் செயல்பட்டு  வருகிறது.

 எங்களது நிறுவனத்தின் சமூகப்பொறுப்புணர்வு  எங்களது இதயத்துன் நெருக்கமான இணைப்பை கொண்டுள்ளது. எங்களது சமூக, சுற்றுச்சூழலுக்கான வளங்குன்ற  திட்டங்களில் நாங்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளோம். எங்களது முதன்மையான வர்த்தகத்துடன் இதற்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கிறோம்.

நிறுவன சமூகப்பொறுப்பு : சமூக அக்கறையுள்ள நிறுவனம் என்பதே எங்களது
தத்துவம். “நேர்மையாக சம்பாதித்தல்-இரக்கத்துடன் செலவிடுதல்’’ என்பதே எங்களது
நோக்கம். கூட்டு முயற்சி மூலமாக மாற்றங்களை உருவாக்க நாங்கள் குறிக்கோள்களை
கொண்டுள்ளோம். சமூக சேவையாற்ற தொண்டு நிறுவனங்களுடன் அர்த்தமுள்ள கூட்டு சேர்தல், எங்களது ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை கொண்டு
அனுபவம்வாய்ந்த தன்னார்வலர்களை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம்
செலுத்துகிறோம். அரசுப்பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த நாங்கள்
ஈடுபட்டுள்ளோம். பள்ளிகளில்  கழிப்பறைகளை கட்டித்தருதல் மூலமாக பள்ளிக்கு
வருகை தரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பள்ளியில் இருந்து இடை நிற்றலை குறைக்கவும் பாடுபட்டு வருகிறோம்.

 நாங்கள் வெற்றிகரமான கவ்ஸ் டிரீம்  ரன்னர்ஸ் அரை மாரத்தான் ஒட்டத்தை
(கவ்ஸ் டிஆர்எச்எம்)  நடத்தியுள்ளோம். 2018 ஆம் ஆண்டு ஓட்டத்தில்  4ஆயிரத்திற்கும்
மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதன் மூலம் கிடைத்த வருவாயை கொண்டு
மாற்றத்திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்களை  வாங்கினோம்.
வேணு மாதுரி;   ஊரகப்பகுதிகளில் போதிய வருமானமில்லாமலும் எந்த ஒரு
வர்த்தகமும் இல்லாமலுமம் அதிகரித்து வரும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும்
வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. ஊரகப்பகுதிகள் மேலும் தன்னிறைவுடன்
விளங்க நாங்கள் வேணு மாதுரி அறக்கட்டளையுடன் இணைந்து  பணியாற்றி
வருகிறோம். நாங்கள் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் ராதா நகரியில் 
ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள மிக சிறிய கிராமமான ராமன்வாடியில் எங்களது
பணிகளை தொடங்கினோம். 2.5 ஏக்கர் பாசன வசதியுள்ள நிலத்தில் இந்த திட்டம்
தொடங்கப்பட்டது. மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: ஆர்.கே.தரன்,
மொபைல்:98400 66096