பாரிவேந்தர் கவிதைகள் நூல் வெளியீட்டு விழா

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தர் டாக்டர் தா.இரா. பாரிவேந்தர்
அவர்களின் கவிதை நூலான “பாரிவேந்தர் கவிதைகள்” நூல் வெளியீட்டு விழா 27/12/2018 அன்று கிண்டி ஹோட்டல் ரமடா பிளாஸாவில் வேந்தர் அரங்கத்தில் மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் இணைத் துணைவேந்தரும் தமிழ்ப்பேராயத்தின் 
தலைவருமான முனைவர் இர. பாலசுப்பிரமணியன் அவர்கள் வரவேற்புரை வழங்க விழா இனிதே தொடங்கியது. பல்வேறு தேசிய விருதுகளையும் மாநில விருதுகளையும் பெற்ற பத்மபூஷன் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பாரிவேந்தர் கவிதைகள் நூலினை வெளியிட கவிஞர் அறிவுமதி அவர்கள் நூலினைப் பெற்றுக்கொண்டார்.

முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அறிஞர் பெருமக்கள் பலரும் வாழ்த்துரை வழங்கினர். நூலினைப் பெற்றுக்கொண்ட கவிஞர் அறிவுமதி அவர்கள் “பாரிவேந்தர் கவிதைகள்” குறித்து தனது சிறப்புரையில் மிக நுட்பமாகப் பேசினார்.

நூலினை வெளியிட்ட பத்மபூஷன் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பாரிவேந்தர்
குறித்தும் அவரின் கொடைத்தன்மை குறித்தும் பேசியதோடு பாரிவேந்தர் கவிதைகள் எவ்வாறு அவரின் வாழ்வனுபவங்களிலிருந்து விரிகின்றன என்பதைப் பலநிலைகளில் தனக்கே உரித்தான மொழிப்புலமையில் விரிவாகப் பேசினார்.

டாக்டர் தா. இரா. பாரிவேந்தர் அவர்கள் விழாவின் நிறைவாகத் தன் கவிதைகள்
உருவான பின்புலத்தையும் கவிதைகளின் மொழியின் வடிவம் குறித்தும் ஏற்புரை வழங்கியதோடு கவிப்பேரரசு வைரமுத்து, கவிஞர்அறிவுமதி, முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன் ஆகியோருக்குக் கவிதை நடையிலேயே நன்றியுரையும் வழங்கினார்.

இவ்விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் எஸ்.ஆர்.எம்.
கல்விக் குழுமத்தின் தலைவர் இளைய வேந்தர் திரு. இரவி பச்சமுத்து அவர்கள் சிறப்பு செய்தார்.

விழாவின் நிறைவாகத் தமிழ்ப்பேராயத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கா.
மதியழகன் நன்றியுரை வழங்க தமிழ்ப்பேராயத்தின் செயலர் முனைவர் பா. ஜெய்கணேஷ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க விழா இனிதே நிறைவுபெற்றது.

விழாவில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்