குடும்பத்தோடு பார்த்து ரசிக்க வேண்டிய படம் “விஸ்வாசம்”. தணிக்கை அதிகாரிகள் “U” சான்றிதழ் வழங்கினர்.
அஜீத் குமார் நடிப்பில் வெளிவர இருக்கும் “விஸ்வாசம்” மிக பெரிய பண்டிகை கோலாகலத்தை ரசிகர்களுக்கு தந்து கொண்டு இருக்கிறது என்றால் மிகை ஆகாது. அவர்களின் உற்சாக மகுடத்தில் மேலும் ஒரு மகுடமாக ஒரு செய்தி படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் “U” சான்றிதழ் வழங்கிய செய்தி.
“எங்களது நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் குடும்பத்தோடு வந்து பார்க்கும் வகையில் படங்களை தருவதில் மிகவும் முனைப்போடு இருப்போம். தற்போது எங்கள் தயாரிப்பில் வெளி வர இருக்கும் “விஸ்வாசம்” படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் “U” சான்றிதழ் தந்ததில் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாயகன் அஜித் குமார் சாருக்கும், இயக்குனர் சிவாவுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. அவர்கள் இருவரும் தூண்களாக இருந்து உழைத்து இருக்கிறார்கள். எல்லா தரப்பினரையும் கவரும் படமாக விஸ்வாசம் அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இசை அமைப்பாளர் டி இமானின் இசை பொங்கல் கொண்டாடத்துக்கு உகந்த வாறு பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறது. மாநகரம் முதல் குக்கிராமம் வரை பட்டி தொட்டி எங்கும் இந்த படத்தின் பாடல்கள் சேம ஹிட்” என்கிறார் தயாரிப்பாளர் டி ஜி தியாகராஜன்.
அஜித் குமார், நயன்தாரா,விவேக், தம்பி ராமையா, யோகி பாபு ,ரமேஷ் திலக், அனைக்கா, கோவை சரளா, உட்பட பல்வேறு நட்சத்திரங்களும் நடித்து இருக்கும் ” விஸ்வாசம் ” படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி. டி இமானின் இசையில் , ரூபன் ஒளிப்பதிவில், திலிப் சுப்புராயன் சண்டை பயிற்சியில்,பிருந்தா மற்றும் கல்யாண் ஆகியோரின் நடன அமைப்பில், மிலன் கலை வண்ணத்தில், கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் வெளியிட , சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில், டி ஜி தியாகராஜன், செல்வி தியாகராஜன், செந்தில் தியாகராஜன் , மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்து உள்ளனர்.