கஜா புயல் நிவாரண மாரத்தான் போட்டி

கஜா புயல் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல நாட்களாகியும் இன்னும் பலகிராமங்களில் துயரக் காட்சிகள் மாறவில்லை. மாணவர்கள் பலர் இன்னும் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. சாலைகள் இல்லை,குடிநீர் இல்லை, மின்சாரம் இல்லை, உணவு இல்லை, இருக்க இடமில்லை என்று இல்லாமை தொடர்கிறது. உலகிற்கேபடியளக்கும் விவசாயிகளின் கதியைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. துயரத்தில் தவிக்கும் மக்களின் கண்ணீர் துடைக்கசென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இருந்து அதிகாலை 5 மணிக்கு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

சிறு சிறு துளிகள் சேர்ந்தால் பெருவெள்ளமாகும். ஆயிரம் துளிகளாக சேர்ந்து மாபெரும் வெள்ளமாக திரண்டு இளைஞர்கள்,இளம்பெண்கள், சமூக ஆர்வலர்கள், பிரபலங்கள் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர். ஜியோ இந்தியா அறக்கட்டளை மற்றும்ஈவண்ட்ஸ் வாக் இணைந்து சென்னையை தூய்மைப் படுத்துவதற்கும் பங்களிப்பு செய்ய போட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 21 கிலோ மீட்டர், 10 கிலோமீட்டர், 5 கிலோ மீட்டர், 3 கிலோ மீட்டர் மற்றும் 1 கிலோ மீட்டர் தூரம் என்று 5 பிரிவுகளாக மாரத்தான்போட்டி நடைபெற்றது.

கால்ஸ் நிறுவன இயக்குனர் ராஜசேகரன், கால்ஸ் நிறுவன வர்த்தகப் பிரிவுத் தலைவர் டாக்டர் உப்பிலியப்பன் கோபாலன், தெற்குமண்டல செயல் இயக்குனர் எஸ்.ஸ்ரீகுமார் ஆகியோர் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தனர். விமான நிலைய இயக்குனர்ஜி.சந்திரமௌலி, விமான நிலைய ஊழியர்கள் சங்க மண்டல செயலாளர் எல்.ஜார்ஜ், பாரா ஒலிம்பிக் கமிட்டித் தலைவர்டி.என்.சந்தோஷ்குமார், நடிகர்கள் நகுல், வையாபுரி ஆகியோரும் போட்டியை துவக்கி வைத்தனர்.