சுகுமார் கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள கடைசி எச்சரிக்கை படத்தின் முதல் டீசரை இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டு வாழ்த்தினார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு.
முன்னதாக கடைசி எச்சரிக்கை படத்தின் முதல் தோற்றம் மற்றும் தலைப்பு வடிவமைப்பை இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான வேல்ராஜ் வெளியிட்டார். இந்தப் படத்தின் தலைப்பும் டிசைன்களும் மீடியா உலகில் பெரும் ஆர்வத்தைக் கிளப்பியிருந்தன.
இந்த நிலையில் படத்தின் டீசரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார் கலைப்புலி தாணு. டீசரைப் பார்த்த பிறகு அவர் பேசுகையில், “இன்று உலகம் மிக ஆபத்தான சூழலில் உள்ளது. இன்றைய சூழலுக்கு ஏற்ற படமாக உருவாகியுள்ளது கடைசி எச்சரிக்கை. அனைவரும் பார்க்க வேண்டிய படம். இயக்குநர் சுகுமார் கணேசனுக்கு வாழ்த்துகள்,” என்றார்.
படத்துக்கு வி சந்திரசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். AIS. நோபல் ராஜா இசையமைத்துள்ளார். கலை: ஏ மாரியப்பன், வி சீனிவாசன் தயாரித்துள்ளார். மக்கள் தொடர்பு எஸ் ஷங்கர். கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார் சுகுமார் கணேசன்.