234 எம் எல் ஏக்கள். முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட, 49 எம்பிக்களை அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இன்று நேரில் அழைத்து சந்தித்தார் . எம் பிக்கள் மற்றும் எம்எல் ஏக்களை கூட்டத்திற்கு சசிகலா அழைத்ததால் பரபரப்பும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.இந்த நிலையில், மாலை 5 மணி அளவில், ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில், எம்பிக்கள் மற்றும் எம்எல் ஏக்களை கூட்டம் தனி தனியா நடைப்பெற்றது.
இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய சசிகலா எம்பிக்கள் மற்றும் எம்எல் ஏக்கள் கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமான விதிமுறைகளை மட்டும் தெரிவித்துவிட்டு , கூட்டத்தை முடித்துக் கொண்டாராம் .