இன்று காலை சட்டமன்ற நிக்ழ்ச்சியில் கலந்துகொள்ள மு.க.ஸ்டாலின் தனது இல்லத்திலிருந்து புறப்பட்டு காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஸ்டாலின் கார் அணிவகுப்புக்கு பின்னால் முதல்வர் ஓபிஎஸ் கார் வந்துள்ளது. இதை பார்த்த ஸ்டாலின் முதல்வர் கார் செல்லும்போது நாம் முன்னால் செல்ல கூடாது. அவர் கார் செல்லட்டும் ஒரம் ஒதுங்கி நில்லுங்கள் என்று கூறி தனது கார் மற்றும் உடன் பாதுகாப்புக்காக வந்த கார்கள், உடன் வந்த எம்.எல்.ஏக்கள் காராஇ ஓரங்கட்டசொன்னார். அவர் கார் ஓரங்கட்டபட்டவுடன் வேகமாக வந்த முதல்வர் ஓபிஎஸ்சின் கான்வாய் அவர்களை கடந்து சென்றது. அதன் பின்னர் ஸ்டாலின் கார் சென்றது. ஸ்டாலினுக்கு சிஆர்பிஎஃப் பாதுகாப்பு உண்டு. எதிர்கட்சித்தலைவர் என்ற முறையில் அமைச்சர் அந்தஸ்து உண்டு. ஆகையால் அவரது காருக்கும் உரிய அரசு மரியாதை உண்டு. அவரது கார் முன்னால் சென்றால் எந்த போலீசாரும் தடை செய்ய போவதில்லை. ஆனாலும் தனது காரை ஓரங்கட்டியது பலராலும் பாராட்டப்படுகிறது.