சீமான் தனது திரைப்பிரவேசத்தை வெகுநாட்களுக்குப் பிறகு தொடங்கி இருக்கிறார். AR. சூரியன் R.விஜய் ஆனந்த் இணைந்து இயக்கி இருக்கும் தவம் படத்தில் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். கதையின் நாயகனாக வசியும் நாயகியாக பூஜாஸ்ரீயும் நடித்து இருக்கும் இப்படம் விவசாயத்தை மையமாக கொண்டிருக்கிறது.
படத்தின் தலைப்புக்கு கீழ் விவசாயப்புரட்சி என்ற லைனை இணைத்திருக்கிறார்கள். சீமான் கதாபாத்திரம் தான் படத்தின் ஹைலைட் என்பது ட்ரைலரில் தெரிவதால் சீமான் ரசிகர்களுக்கு இப்படம் வரமாக இருக்கும் என்று உண்மை. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னை கமலா தியேட்டரில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.