மூன்றாம் கட்டத்தில் தடம் பதிக்கும் ஹிமாலயா ப்யூரிஃபையிங்க் நீம் ஃபேஸ் வாஷ்

சென்னை: 2018 டிசம்பர் 7: இந்தியாவின் முன்னணி ஃபேஸ் வாஷ் பிராண்டான ஹிமாலயா ப்யூரிஃபையிங்க் நீம் ஃபேஸ் வாஷ், சென்னை லேடி சிவசாமி ஐயர் பெண்கள் மேனிலைப் பள்ளியில், இந்தியா முழுமைக்குமான ‘என்னோட முதல் பிம்பிள்’ மூன்றாம் கட்டப் பிரச்சாரத்தை இன்று தொடங்கியது. ‘என்னோட முதல் பிம்பிள்’ வித்தியாசமான முனைவின் நோக்கம் வளரும் பருவத்தில், குறிப்பாகப் பிம்பிள்கள் தோன்றும் காலத்தில், உணர்வு மற்றும் உடல் ரீதியாக 13–17 வயது பதின்பருவப் பெண்கள் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள ஒருங்கிணைப்பதே ஆகும்.

இந்த முனைவின் ஒரு பகுதியாக ஹிமாலயா பல்வேறு துறைகளில் வெற்றி பெற்ற பெண்கள் குழுவுடன் ஒருங்கிணைந்து இளம் பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடல்களுக்கு ஏற்பாடு செய்தது. தங்களது தனிப்பட்ட கதைகளை பதின்பருவப் பெண்களுடன் பகிர்ந்து கொண்டதுடன் வாழ்க்கையில் இன்னும் பெரிய இலக்குகளில் கவனம் செலுத்துமாறு ஊக்குவித்தனர்.

பிம்பிள்ஸ் காரணமாக பதின்பருவப் பெண்கள் தங்கள் தோற்றம் குறித்துச் சங்கடப்படுவதால் பொது வாழ்க்கையில் பங்கேற்பதைத் தவிர்க்கின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பதின்பருவ ஆரம்ப காலங்களில் பிம்பிள்கள் தோன்றுவது சகஜம் என்பதால், ‘என்னோட முதல் பிம்பிள்’ பிரச்சாரத்தின் நோக்கம் இளம் பெண்களை இது போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுவித்து அவர்கள் மனதில் நம்பிக்கையை ஊட்டுவதுதான்.

நிகழ்ச்சியில் 200க்கும் அதிகமான பதின்பருவப் பெண்கள் பங்கேற்றனர். அர்ஜுனா மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் பெற்ற இந்தியாவின் முன்னணி ஸ்க்வாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல் கார்த்திக் கௌரவப் பேச்சாளராக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இளம் பெண்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் தனது பதின்பருவ வயதில் ஆக்கப்பூர்வமாகவும், உந்து சக்தியுடனும் விளங்க தொடர்ந்து விளையாட்டிலும், பயிற்சியிலும், கவனம் செலுத்தியதாகக் கூறினார். ஹிமாலயா ட்ரக் நிறுவனம், நுகர் பொருள் பிரிவு, ஃபேஸ் வாஷ் – பிராண்ட் மேலாளர் கீர்த்திகா தாமோதரனும் உடனிருந்தார்.

இது குறித்து அர்ஜுனா மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் பெற்ற இந்தியாவின் முன்னணி ஸ்க்வாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல் கார்த்திக் பேசுகையில் ‘பதின்பருவத்தில் சரும மாற்றங்கள் இயற்கை என்பதால், வெட்கப்படவோ, உற்சாகம் குறையவோ தேவையில்லை. உடல் ரீதியான இவ்வகை இயற்கை மாற்றங்களுக்காகக் கவலைப்படுவதை விடவும், பதின்பருவத்தில் பல முக்கிய விஷயங்கள் உள்ளன. நமது ஆளுமையை நிலை நிறுத்திக் கொள்ளவும், ஒவ்வொரு நாளும் நம்மை வலுப்படுத்திக் கொள்ளவும், பல்வேறு துறைகளில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. எனவே இந்தப் பதின்பருவ வயதை நன்கு பயன்படுத்திக் கொண்டு பல நண்பர்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். இனிமையான நினைவுகளைத் தக்க வைப்பதுடன், வெற்றி பெறத் தேவையான கட்டுப்பாட்டையும், நம்பிக்கையையும் வளர்ப்பதே மிகவும் முக்கியமாகும். ஹிமாலயாவின் ‘என்னோட முதல் பிம்பிள்’ பிரச்சாரத்துடன் இணைந்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். யாரை விடவும் நாம் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதுடன் நமக்கு நாமே தான் போட்டி என்பதையும் ஒவ்வொருவரும் உணர்ந்தால், அந்த உணர்வே வாழ்க்கையின் பல உயரங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும்’ என்றார்.

முனைவு குறித்து ஹிமாலயா ட்ரக் நிறுவனம், நுகர் பொருள் பிரிவு, ஃபேஸ் வாஷ் – பிராண்ட் மேலாளர் கீர்த்திகா தாமோதரனும் கூறுகையில் ‘பதின்பருவப் பெண்களுக்குப் ‘பிம்பிள் இல்லாத ஆரோக்கியமான சருமத்தை’ வழங்க வேண்டும் என்பதே நாட்டின் முன்னணி ஃபேஷ் பிராண்டான எங்களது நோக்கமாகும். இளம் பெண்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் பல்வேறு மாற்றங்கள் சவாலானவை. பருவ மாற்றம் பெண்களுக்குக் கவலை தருவதுடன், நம்பிக்கையையும், சுய மரியாதையையும் பாதிக்கின்றன. எனவே ‘என்னோட முதல் பிம்பிள்’ என்னும் பிரச்சாரம் மூலம் பிம்பிள்கள் காரணமாக நிலவும் நம்பிக்கையின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைச் சமாளிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். பிம்பிள்கள் தோன்றுவது பதின்பருவதின் ஓர் அங்கம் என்பதால் வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டிய பெரிய சவால்கள் ஏராளம் இருக்கின்றன என்பதையும் வலியுறுத்துகிறோம்’ என்றார்.

நடப்பு ஆண்டுக்கான ‘என்னோட முதல் பிம்பிள்’ மூன்றாம் கட்டப் பிரச்சாரம் தேசிய அளவில் பூபனேஷ்வர், சூரத், ராஜ்பூர், ஜலந்தர், அமிர்தசரஸ், அகமதாபாத், குவாஹதி ஆகிய எட்டு நகரங்களில் நடைபெறுகிறது. சென்னையைப் போலவே ஒவ்வொரு நகரத்திலும் பிரபல நபர் ஒருவர் இளம் பெண்களுடன் கலந்துரையாடிச் சருமம் தொடர்பான பிரச்சினைகளைச் சமாளிக்க ஊக்கமளிப்பதுடன், நம்பிக்கை மற்றும் வெற்றியை நோக்கிப் பயணித்த சொந்தக் கதையையும் பகிர்ந்து கொள்வார். பதின்பருவப் பெண்களை ஒருங்கிணைக்கவும், தேசிய அளவிலான கலந்துரையாடல்களுக்கும் டிஜிடல் பிரச்சாரம் இம்முனைவுக்கு உறுதுணையாக இருக்கும். மேலும் விவரங்களுக்கு: www.himalayawellness.com