அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் முதல் மாபெரும் கோடீஸ்வரர் பில்கேட்ஸ் என்று ஆக்ஸ்பாம் இண்டர்நேஷனல் ஆய்வு நிறுவனம் தகவல்

மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனர் பில்கேட்ஸ் தற்போது 743 கோடி டாலர் சொத்து மதிப்புடன் உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் ஆகத் திகழ்கிறார். இந்நிலையில் அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் முதல் மாபெரும் கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தை பில்கேட்ஸ் பெறுவார் என ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. ஆக்ஸ்பாம் இண்டர்நேஷனல் என்ற ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் முதல் மாபெரும் கோடீஸ்வரர் என்ற அந்தஸ்து பில்கேட்ஸ்க்கு கிடைக்கும் என கணித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து பில்கேட்ஸ் விலகியபோது அவரின் சொத்து மதிப்பு 5௦ பில்லியன் டாலராக இருந்தது. 2௦16-ம் ஆண்டு நிலவரத்தின்படி பில்கேட்சின் சொத்து மதிப்பு 75 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. 2009-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் பில்கேட்சின் சொத்து மதிப்பு ஆண்டுதோறும் 11% உயர்ந்து வருகிறது. உலக அளவில் உள்ள சொத்துக்களில் பாதி அளவு 8 கோடீசுவரர்களின் கையில் உள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தை பில்கேட்ஸ் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.