தமிழ் சினிமாவில் சத்யராஜுடன் கவுண்டமணி போட்ட லூட்டிகளுக்கு அளவே இல்லை. அதே போல், வடிவேலு-சத்யராஜ் இணைந்து நடித்த படங்களும் மக்களால் ரசித்து பார்க்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் ரீ-என்ட்ரி ஆகியுள்ள வடிவேலு, சத்யராஜுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘கட்டப்பனயிலே ரித்விக் ரோஷன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் சத்யராஜ் – வடிவேலு மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை மலையாளத்தில் இயக்கிய நதிர்ஷாவே தமிழிலும் இயக்கவுள்ளாராம். இந்த படத்தை பிரபல மலையாள நடிகர் திலீப் தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. `6’2′. `அசத்தல்’, `சவுண்ட் பார்ட்டி’, `கோவை பிரதர்ஸ்’, `லூட்டி’, `பெரிய மனுஷன்’, `இங்கிலீஷ்காரன்’, `மண்ணின் மைந்தன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் சத்யராஜ்-வடிவேலு காமெடி கூட்டணி கலக்கியிருந்தது. இந்நிலையில் மீண்டும் இக்ககூட்டணி இணைய உள்ளதால் ரசிகர்களுக்கு காமெடி ட்ரீட் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.