பாக்ஸ் ஆபீஸில் கடுமையான போட்டிக்கு மத்தியில் திரைப்படங்கள் தடுமாறி வரும் இந்த கால சூழலில் ஒரு சில படங்கள் நல்ல வலுவான மற்றும் விதிவிலக்கான கதைகள் மூலம் வெற்றியை பெறும். இது வெறும் கட்டுக்கதை அல்ல, மாறாக “ராட்சசன்” படத்தின் மிகப்பெரிய வெற்றியின் மூலம் இது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆரம்ப கட்டத்தில் வணிக வட்டாரத்துக்கு திரையிட்டு காண்பித்ததில் இருந்து.
பத்திரிகை மற்றும் ஊடகம் ஆகிய காட்சிகளிலும் நல்ல வரவேற்பை பெற்ற ராட்சசன் படம், மல்டிபிளெக்ஸ் மற்றும் சிங்கிள் ஸ்கிரீன்கள் என திரையிட்ட அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இல்லையெனில், வெளியாகி 25ஆம் நாளில் கூட எப்படி ஒரு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓட முடியும்?
“ஆம், இதைப் பற்றி வேறு என்ன சொல்ல முடியும்? அடுத்தடுத்த ஆச்சர்யங்கள் எங்களுக்கு கிடைத்தது. பார்வையாளர்களின் பரவலான நல்ல கருத்துக்கள் படத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றது. இந்த படத்தை பற்றி தொடர்ந்து அவர்கள் பேசுவது, எதிர்காலத்திக் அத்தகைய படங்களை வழங்குவதற்கான பொறுப்பை எனக்குள் செலுத்துகிறது. மேலும், யதேச்சையாக படத்தின் 25ஆம் நாள், இயக்குனர் ராம்குமார் பிறந்த நாளன்று அமைந்தது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
இது அவருடைய பிறந்த நாள் பரிசு என்று சொல்வதை விட, அவரது நீண்ட நாளைய கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி. குழுவில் உள்ள அனைவருமே வெற்றிக்கான மிகுந்த முயற்சியை மேற்கொண்டனர். நடிகர் விஷ்ணு விஷால் ஒரு நட்சத்திரமாக இந்த படத்தின் மூலம் மாறுவது ஒரு தயாரிப்பாளராக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அமலா பால் ஆகட்டும் அல்லது இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகட்டும் ஒவ்வொருவரும் தங்கள் இதயத்தையும், ஆன்மாவையும் கொடுத்து இந்த படத்துக்காக உழைத்தார்கள்” என்றார் ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு.