முற்றிலும் புதிய வர்களின் முயற்சியில் உருவாகி நவம்பர் 2 -ல் வெளிவரும் படம் ‘சந்தோஷத்தில் கலவரம்’ . இப்படம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி படத்தின் இயக்குநர் கிராந்தி பிரசாத் பேசும் போது , ” எனக்கு சினிமா மீது அவ்வளவு காதல். எவ்வளவோ வேலை வாய்ப்பு வருமானம் எல்லாவற்றையும் இழந்து விட்டு துறந்து விட்டுத்தான் சினிமாவுக்கு வந்திருக்கிறேன்.
இந்தப் படத்தைப் பல போராட்டங்களைச் சந்தித்துதான் எடுத்தேன். ஆனால் படம் எடுத்ததை விட வெளியிடுவதையே மிகவும் சிரமமாக உணர்ந்தேன். கடைசியில் நானே வெளியிடுவது என்று முடிவு செய்தேன். வெளியிடுகிறேன். நவம்பர் 2 -ல் உலகம் முழுதும் வெளியாகிறது. இந்தப் படம் காதல் , நட்பு , நகைச்சுவை .ஆக்ஷன் , ஹாரர் , த்ரில்லர் என்று எல்லாமும் கலந்த ஒன்றாக இருக்கும்.
இந்த உலகம் இரு வேறு சக்திகளால் இணைந்தது. பாசிடிவ் சக்திக்கும் நெகடிவ் சக்திக்கும் இடையே தினமும் போர் நடக் கிறது. இது ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொருவருக்குள்ளும் நடைபெறுகிறது. இங்கே யாருக்கும் காஸ்மிக் எனர்ஜி பற்றித் தெரிவதில்லை. படித்தவர் கூட அறியவில்லை. அதன் அற்புதங்கள் எப்படி வெளியே தெரியும்? நான் காஸ்மிக் சக்தி பற்றிப் படத்தில் கூறியிருக்கிறேன்.
இந்த உலகில் உள்ள பாசிடிவ் எனர்ஜியையும் காஸ்மிக் எனர்ஜியையும் சேர்த்தால் பெரிய அற்புதம் நிகழும். எவ்வளவோ படித்தாலும் காஸ்மிக் எனர்ஜி பற்றி யாருக்கும் தெரிவதில்லை. அதைப் பற்றிப் படத்தில் கூறியிருக்கிறேன். ” இவ்வாறு இயக்குநர் கிராந்தி பிரசாத் கூறுகிறார்.