பாலியல் தொல்லைகளிலிருந்து பெண்களை பாதுகாக்க #MeToo அமைப்பு உருவாகியுள்ளது. இதனையடுத்து பிரபலமான பலரின் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன.
வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய புகார் பலராலும் பேசப்பட்டு வருகிறது. எனவே கடந்த 2 வாரங்களாக #Metoo ஹேஷ்டேக் இந்தியா முழுக்கப் பிரபலமாகியுள்ளது.
இந்நிலையில், கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை என்பவர் இயக்குநர் சுசி கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார் சுசி கணேசன். ‘அவர் தன்னிடம் வாய்ப்பு கேட்டதாகவும், வாய்ப்பு தரவில்லை என்பதால் பழிவாங்குகிறார்’ என தெரிவித்துள்ளார்.
அவருடைய மறுப்புக்குப் பதில் அளித்துள்ள லீனா மணிமேகலை, சுசி கணேசனின் மறுப்பே அவரைக் காட்டிக் கொடுக்கிறது. அவர் எடுத்த படங்களைவிட, நான் நல்ல படங்களையே எடுத்திருக்கிறேன். என் படங்களில் பொறுக்கிகள் ஹீரோக்கள் அல்ல.
மனசாட்சியை விற்பவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?.” எனத் தெரிவித்துள்ளார்.