உயிருக்கு பயந்து ஒளிந்த ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி வசந்தபாலன் இயக்கத்தில் “ஜெயில்” படப்பிடிப்பில் பயங்கரம்
கண்ணகி நகர் என்றாலே அடிதடி, கேங்வார் அடிக்கடி நடக்கும். “ஜெயில்” படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு கண்ணகி நகரில் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்ணதி, நந்தன்ராம், பாண்டி சம்பந்தப்பட்ட காட்சி படமாக்கி கொண்டிருந்தபோது, நிஜமாகவே அரிவாள், கம்போடு ஒரு கோஷ்டி இன்னொரு கோஷ்டியை தாக்க உயிர் பிழைத்தால் போதும் என்று ஜி.வி.பிரகாஷ்-அபர்ணதி அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் தஞ்சம் புகுந்தனர். நிஜ பைட் இரண்டு மணி நேரம் முடிந்த பிறகு, மீண்டும் படப்பிடிப்பை நடத்தினார் வசந்தபாலன்.
அங்காடி தெரு, வெயில் இரு படங்களையும் யதார்த்தமாக படமாக்கி அனைவரின் பாராட்டையும் பெற்ற வசந்தபாலன் “ஜெயில்” படத்தில் குப்பத்து மக்களின் வாழ்வியலை யதார்த்தமான முறையில் படம்பிடித்திருக்கிறார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்-அபர்ணதி, சிற்பி மகன் நந்தன்ராம், பசங்க பாண்டி, ராதிகா, ரவிமரியா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இசை- ஜி.வி.பிரகாஷ், பாடல்கள்- கபிலன். சினேகன் வெயில் படத்திற்கு பிறகு “ஜெயில்” படத்தில் வசந்தபாலனுடன் மீண்டும் இணைகிறார். சண்டை-அன்பு அறிவு, நடனம்- சாண்டி, ராதிகா, வசனம்- பாக்யம்ஷங்கர், ராமகிருஷ்ணன். கலை-சுரேஷ்கல்லரி, கதை-திரைக்கதை-இயக்கம்-வசந்தபாலன்.
ஜி.வி.பிரகாஷ் மிகப்பெரிய நம்பிக்கையுடன் இருக்கும் படம் “ஜெயில்”. மிஷ்கின் இயக்கத்தில் சவரகத்தி, விஷாலின் இரும்புத்திரை படங்களை வெளியிட்ட கிரிகேஷ் சினி கிரியேஷன்ஸ் ஸ்ரீதரன் மரியதாசன் இப்படத்தை தயாரிக்கிறார். எக்ஸ்கியூட்டிவ் புரொட்யூசர் பி.டி.செல்வகுமார்.