உலக இதய தினத்தை முன்னிட்டு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை, இன்று காவல்துறை பணியாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தாருக்கான சிறப்பு இதய முகாம் ஒன்றை கீழ்ப்பாக்கம் காவலர் சமுதாயக்கூடத்தில் நடத்தியது. 200-க்கும் மேற்பட்ட காவல் பணியாளர்கள், சிறப்பு உடல்நல பரிசோதனை மற்றும் ஸ்கிரீனிங் நடவடிக்கையில் பங்கேற்றனர். முகாமில் வந்திருந்த மருத்துவர்கள் இதயம் தொடர்புடைய உடல்நலப் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வூட்டியதுடன், ஒரு ஆரோக்கியமான இதயத்திற்கு ஆரோக்கியமான வாழ்வியல் முறை அவசியத்தை வலியுறுத்தினர். வேப்பேரி, எஸ்டேட் அன்ட் வெல்ஃபேர் பிரிவு கூடுதல் காவல்துணை ஆணையர் திரு. லயோலா இக்னேஷியஸ், G3 கீழ்ப்பாக்கம் காவல்நிலையம் காவல் ஆய்வாளர் திரு. V. பாலன் மற்றும் ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை தலைமை இதய நெஞ்சக மற்றும் உறுப்புமாற்று அறுவைசிகிச்சை மருத்துவர், இதய அறிவியல்கள் – இயக்குநர் டாக்டர். K.R. பாலகிருஷ்ணன்அவர்களால் இந்நிகழ்ச்சி கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது.
கார்டியோவாஸ்குலர் டிசீஸ் (CVD) அதாவது இதய நாள நோய் என்பது, இதயத்தின் எந்த நோயையும், மூளையின் நாள நோய் அல்லது இரத்தக்குழாயின் நோயைக் குறிக்கும். மிகவும் நிலவும் இதய நாள நோயில் மாரடைப்பு போன்ற இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பெருமூளை நாள நோய்களும் உள்ளடங்கும். ஒவ்வோராண்டும் தெரிவிக்கப்பட்ட இதய நோய்களில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு உள்ளது. இதில் பெரும்பாலான அளவு வழக்கமாக அழுத்தம் தொடர்புடையது. காவல் காப்பது ஒரு தொழில் என்ற வகையில் அதிகம் அழுத்தம் உள்ள வேலை, காவலர்கள் ஒழுங்குமுறை தவறாமல் ஸ்கிரீனிங் மேற்கொள்ள வேண்டும். இந்த முகாமில் காவல் அதிகாரிகளின் குடும்பங்களிலிருந்தும் மற்றும் பொதுமக்களிலிருந்தும் பெரும்பாலோர் பங்கேற்று காணப்பட்டது.
டாக்டர். K R பாலகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், “தமிழ்நாடு காவல்துறை, பல ஆண்டுகளாக அவசர நிலைகளில் எந்த தடைகளுமின்றி நோயாளிகளை கவனிப்பதற்கு எங்களுக்கு உதவுவதில் மிகவும் முக்கிய பங்காற்றியுள்ளது. அவசரநிலைகள் பற்றிய அவர்களுடைய விழிப்புணர்வும் மற்றும் சரியான நேரத்தில் உடனடியாக உதவுவதும் மிகவும் போற்றத்தக்கதாகும். எனினும், 24 மணி நேரமும் நகரத்தை காப்பதில் அவர்கள் ஆற்றிவரும் அயரா அரும்பணி அவர்களின் உடல்நலத்தை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பாதிப்புக்கு உட்படுத்தியுள்ளது. இதற்கு மருத்துவ இடையீடும், இதய அறிகுறிகள் பற்றிய விழிப்புணர்வும் அவசியமாகும். பிரச்சினைகளை முன்கூட்டியே அடையாளம் காண்பதற்கு காவல்துறையுடன் கூட்டாக பொறுப்பை பகிர்ந்துகொள்வதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்,” என்றார்.
இந்த முனைப்பின் ஒரு பகுதியாக, ஃபோர்டிஸ் மலரில் உள்ள மருத்துவர்கள் பங்கேற்பாளர்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் நடத்தினர். ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு வழிகாட்டிய மருத்துவர்கள், புகைப்பிடிப்பதை மற்றும் மது அருந்துவதை கைவிட வேண்டிய அவசியத்தையும், சரியான உடல் எடையை பராமரிப்பது,போதிய உறக்கம் கொள்வது, தினசரி உடற்பயிற்சி செய்யவேண்டியது மற்றும் ஆரோக்கியமாக உணவை உட்கொள்ள வேண்டியதுடன் அவசியத்தையும் வலியுறுத்தினர். மனஅழுத்தத்தை குறைப்பது, இதய சிக்கல்கள் குறித்த முன் அறிகுறிகளை அடையாளம் காண்தல் மற்றும் மருத்துவ தொழிலாற்றுநர்களை எப்போது தொடர்புகொள்ளுதல் ஆகியவை குறித்த பல்வேறு நுட்பங்கள் பற்றி பற்கேற்பாளர்களுக்கு மருத்துவ குழுவினர் விளக்கினர். அவசரநிலை மருத்துவ உதவிக்கான CPR குறித்த பொது அறிவுரைகளும் வழங்கப்பட்டன.
திரு. லயோலா இக்னேஷியஸ் அவர்கள் கூறுகையில், “காவல் பணியாளர்கள் ஒழுங்குமுறையான கவனிப்பு தேவைப்படக்கூடிய மனஅழுத்தம் மற்றும் இதர மருத்துவ சிக்கல்கள் வடிவில் பல உடல் ரீதியான மற்றும் மனரீதியான சவால்களை மேற்கொள்கின்றனர். இந்த நகரத்தின் பாதுகாப்பிற்காக எவ்வளவோ கொடுக்கக்கூடிய நமது காவல் பணியாளர்களின் உடல்நலத்தை பாதுகாக்க வேண்டியது இன்றியமையாததாகும். இந்த முயற்சியை ஃபோர்டிஸ் மலர் எடுத்துள்ளதில் மற்றும் காவலர்கள் அவர்களின் இதயத்தின் மீது அக்கறை கொள்வதற்கு அவர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.
நாளைய தினம் அதாவது 2018, செப்டம்பர் 29-ஆம் தேதி சனிக்கிழமையன்று நாள் முழுக்க நீடிக்கக்கூடிய பொதுமக்களுக்கான இதய நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் பெசன்ட்நகர் கடற்கரையில் ஃபோர்டிஸ் மலர் நடத்தவிருக்கிறது. பொதுமக்களுக்கு ஆரோக்கியமான இதயம் பராமரிப்பதற்கு தேவையான குறிப்புகள் கொடுப்பதற்காக சுழல் சக்கர விளையாட்டு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதய நோய் மற்றும் அதை கண்டறிவதற்கு அறிகுறிகள் பற்றிய ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்படும்.
ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை குறித்து ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையானது 2008-ன் ஆரம்பத்தில் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர்(இந்தியா)லிமிடெட்-ஆல் கையகப்படுத்தப்பட்டது. 1992ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இம்மருத்துவமனையானது, தரமான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மற்றும் பன்முக சிறப்பு பிரிவுகளில் உடல்நல சேவைகளை சென்னையில் வழங்குகிற மிகப்பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகளுள் ஒன்றாக, தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. 180 படுக்கை வசதிகளைக் கொண்டிருக்கும் ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை இதயவியல் மற்றும் இதய அறுவை சிகிச்சை, நரம்பியல் அறுவைசிகிச்சை, மகளிர் நலவியல், எலும்பியல், இரைப்பை குடலியல், நரம்பியல்,குழந்தை மருத்துவம், நீரிழிவு, சிறுநீரகயியல் மற்றும் சிறுநீர்ப்பாதையியல் ஆகிய பல்வேறு துறைகளில் மிக விரிவான மற்றும் முழுமையான மருத்துவ சேவையை வழங்குவது மீது கூர்நோக்கம் கொண்டிருக்கிறது.
ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை, மிக நவீன கேத் லேப் மற்றும் இதய அறுவைசிகிச்சையை மேற்கொள்வதற்காக பல ஆப்ரேஷன் தியேட்டர்கள் மற்றும் தீவிர இதயச் சுவர் சிரை (coronary) கவனிப்பு பிரிவுகளையும் கொண்டிருக்கிறது. இம்மருத்துவமனையில் வயதுவந்தோருக்கும் மற்றும் சிறார்களுக்கும் பல அரிதான மற்றும் சிக்கலான இதய அறுவைசிகிச்சைகள், எலும்பியல் அறுவைசிகிச்சை மற்றும் மூட்டு மாற்று சிகிச்சை, நரம்பு அறுவைசிகிச்சை மற்றும் பிளாஸ்டிக் & மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன. இம்மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவ பிரிவு மற்றும் மகளிர் நலவியல் சேவைகள் இம்மாநகரில் சிறப்பான நற்பெயரை கொண்டிருக்கின்றன. இப்பிரிவில் சிக்கலான பல பிரசவங்கள் மற்றும் அறுவைசிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அத்துடன், பிறந்த குழந்தைகளுக்கான பிரத்யேக மருத்துவயியல் பிரிவும் இங்கு சிறப்பாக இயங்குகிறது.
ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் லிமிடெட் குறித்து ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் லிமிடெட், ஆசியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட உடல்நல பராமரிப்பு சேவை வழங்குநர்களில் ஒரு முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. மருத்துவமனைகள், நோயறிதல் பிரிவுகள் மற்றும் பகல்நேர சிறப்பு சிகிச்சை மையங்கள் என உடல்நல சிகிச்சைக்கான பல பிரிவுகளை இந்நிறுவனத்தின் உடல்நல பராமரிப்பு துறையானது கொண்டிருக்கிறது. தற்போது, இந்நிறுவனம் இந்தியா, துபாய், மொரீஷியஸ் மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் 45மருத்துவமனைகளில் (தற்போது உருவாக்க நிலையில் இருக்கும் திட்டங்கள் உட்பட), ஏறக்குறைய 10,000 படுக்கை வசதிகளுடன், 374-க்கும் அதிகமான நோயறிதல் மையங்களையும் கொண்டு உடல்நல பராமரிப்பு சேவைகளை சிறப்பாக வழங்கி வருகிறது.