பத்திரிகையாளராக பணிபுரியும் சமந்தா வேளச்சேரி பாலத்தின் மேல் நடக்கும் விபத்துக்களை பற்றி கதை எழுத முயற்சி செய்துவருகிறார். அதற்காக பாலத்தின் மேல் யு டர்ன் செய்து செல்லும் வாகனங்களை பற்றிய தகவல்களை பிளாட்பார்மில் இருக்கும் ஒரு மர்ம ஆசாமியிடம் பணம் கொடுத்து பெறுகிறார்.
கிரைம் ரிப்போர்ட்டராக பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ராகுல் ரவீந்திரன் சமந்தாவுக்கு உதவி செய்கிறார். பாலத்தில் யு டர்ன் செய்தவரை பார்க்க செல்லும் சமந்தா அவரை பார்க்க முடியாமல் திரும்பி செல்கிறார். ஆனால் அந்த நபர் கொலை செய்யப்பட்டதாக கூறி சமந்தாவை விசாரணைக்கு அழைத்து செல்கிறது போலீஸ். சமந்தாவிற்கும் அந்த கொலைக்கும் என்ன சம்பந்தம், சமந்தாவை போலீஸ் ஏன் சந்தேகப்படுகிறது, விபத்துக்கான காரணங்களை சமந்தா கண்டறிந்தாரா? என்பதை சுவாரசியமாகவும், திரில்லராகவும் சொல்லிருப்பதே யு டர்ன்.
சமந்தா அப்பாவியான முகபாவனையில் ரசிகர்களை கவருவார். தனிமையில் வாடும் காட்சியில், சீரியஸான காட்சியில், காதல் வசப்படும் காட்சியில் என தனித்தனியே அழகாக ரசிக்கவைக்கிறார் சமந்தா. கம்பீரமான போலீஸ் கதாபத்திரத்தில் ஆதி சிறப்பான நடிப்பு. நரேன் மற்றும் பூமிகா கண்வன் மனைவியாக சிறிது நேரமே வந்தாலும் படத்திற்கு பக்க பலமாக உள்ளனர். ராகுல் ரவீந்திரன் காதல் செய்யும் காட்சிகளில் ஈர்க்கிறார்.
சாதரண விஷயம் தானே என நினைத்து செய்யும் யு-டர்ன் எத்தகைய விளைவுகளை எல்லாம் ஏற்படுத்துகிறது என்பதை தெளிவாக கூறுகிறது யு டர்ன். படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலும் அது இயக்குனருக்கு கிடைத்த வெற்றியே.
யு டர்ன் – யு டர்ன் செய்து பார்க்கலாம்.
இத்திரைப்படம் வெற்றிப்பெற