கேரளா வெள்ளத்திற்கு இளைய தளபதி விஜய் 70 லட்சம் கொடுத்தார், எந்த அரசியல்வாதி கொடுத்தார் – பேரரசு

கேரளா வெள்ளத்திற்கு இளைய தளபதி விஜய் 70 லட்சம் கொடுத்தார், எந்த அரசியல்வாதி சொந்த பணத்தை தூக்கி கொடுத்தார். இயக்குனர் பேரரசு கோப பேச்சு…

“பேய் எல்லாம் பாவம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் லேப் பிரிவ்யூ தியேட்டரில் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட பேரரசு பேசியதாவது…

மலையாளத்திலிருந்து எந்த இயக்குனர் வந்தாலும், தமிழ் இயக்குனர் போலவே கொண்டாடுவோம். “பேய் எல்லாம் பாவம்” பாடல், ட்ரெய்லர் பார்த்தேன் மிக சிறப்பாக இருந்தது. இந்த இயக்குனர் தீபக் நாராயன் மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து உயர்ந்த இடத்தை பிடித்த பாஸில், சித்திக் போல மிக உயர்ந்த இடத்தை பிடிப்பார். கலைக்கு மொழியே தேவையில்லை ஏனெனில் அனைவரும் இந்தியர்கள். 

சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது ஒவ்வொரு தமிழனும் தன்னால் முடிந்த உதவிகளை முன்னின்று கொடுத்தார்கள். நடிகர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்தார்கள்.  இளைய தளபதி விஜய் 70 லட்சம் சொந்த பணத்தை செலவு செய்து நிவாரண பொருட்களை வழங்கினார்.  இதுபோல எந்த அரசியல்வாதியாவது சொந்த பணத்தை கொடுத்தார்களா என கேள்வி எழுப்பினார். கேரளா ரசிகர்கள் மம்முட்டி, மோகன்லால் இருவருக்கும் இணையான வசூல், ஓப்பனிங் விஜய் சார் படங்களுக்கு  எப்போதும் கேரளாவில் இருக்கும். எந்த பிரச்சினை என்றாலும் சினிமாக்காரர்களே குரலும், பொருளும் தருகிறார்கள் என்று பேசினார்..

இயக்குனர் A.வெங்கடேஷ் பேசியதாவது…

“பேய் எல்லாம் பாவம்” இல்லை பேய் எல்லாம் லாபம். ஆமாம் பேய் படங்களுக்கு என்று எப்போதும் ஒரு மினிமம் கியாரண்டி இருக்கிறது. இப்போதெல்லாம் பையர்ஸ் சார் உங்க படம் பேய் படமா என கேட்கிறார்கள். பேய் படங்களுக்கு எப்போதும் முன்னுரிமை கொடுக்கிறார்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என பேசினார்.

விழாவில் கவிஞர் சிநேகன், இயக்குனர் ராசி அழகப்பன், இயக்குனர் கல்யாண், மைம் கோபி, கில்டு யூனியன் தலைவர் ஜாகுவார் தங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தரகன் சினிமாஸ் சார்பாக ஹன்ஸிபாய் தயாரிப்பு. கதாநாயகன் அரசு, கதாநாயகி டோனா சங்கர் அப்புக்குட்டி, ஸ்ரீஜித்ரவி, தர்ஷன், சிவக்குமார், ரசூல், ஒளிப்பதிவாளர் பிரசாந்த், இசையமைப்பாளர் நவீன் சங்கர், எடிட்டர் அருண்தாமஸ், கதை, திரைக்கதை, வசனம் எழுதிய தவமணி பாலகிருஷ்ணன், இயக்குனர் தீபக் நாராயணன்.