முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் “சர்கார்”. விஜய் உடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு, ராதாரவி உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.
சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) அன்று நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் இப்படம் தொடர்பான சூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை 5 நாட்களுக்கு ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றனர். இதனால் விஜய் ரசிகர்கள் செம ஹாப்பியாம்