தேமுதிக தலைவர் திரு.கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்த மாதம் 7-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு சுமார் 40 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்தார் மேலும் அமெரிக்காவில் தேமுதிக தலைவர் திரு.கேப்டன் விஜயகாந்துக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் அமெரிக்கா சென்ற பிறகு,தேமுதிக தலைவர் திரு. கேப்டன் விஜயகாந்த் மிகுந்த உற்சாகத்துடனும், புதுத் தெம்புடனும் காணப்படும் புகைப் படங்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் அவருக்கு முதற்கட்ட சிகிச்சை முடிந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு அமெரிக்காவிலிருந்து சென்னை விமானநிலையம் வந்தடைந்தார்.
இதனையடுத்து அங்கிருந்து வீட்டிற்குசெல்லாமல் தனது குடும்பத்தினருடன் நேராக சென்னை மெரினாவிலுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சமாதிக்கு சென்றார் சரியாக அதிகாலை 2.45 மணிக்கு திமுக தலைவர் நினைவிடத்தில் கண்ணீர் மல்க மலரஞ்சலி செலுத்தினார் அவருடன் அவரது மனைவி திருமதி.பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக துணைச்செயலாளர் திரு.எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக 7 ஆம் தேதி திமுக தலைவர் மறைந்த செய்தி கேட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் விஜயகாந்த் கட்சி பேதங்களை கடந்து தான் கொண்டிருந்த நட்பின் அடிப்படையில் கண்ணீர் மல்க இரங்கல் செய்தியை வெளியிட்டுருந்த காணொளி காட்சி ஒன்று இணையத்தில் அனைவரது மனதையும் உருக செய்தது குறிபிடத்தக்கது.